PPF interest on FD in September: பெரும்பாலான வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் அதிக பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில், அரசாங்கம் பிபிஎஃப் வட்டி விகிதத்தை 7.1% ஆக வைத்துள்ளது. மேலும், PPF முதலீட்டாளர்கள் E-E-E வரிச் சலுகையை அனுபவிக்கிறார்கள்.
அதாவது முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு (பிரிவு 80C இன் கீழ் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை), சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வின்போது திரும்பப் பெறப்படும் தொகைக்கு வரி இல்லை.
இதுமட்டுமின்றி, பிபிஎஃப் ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டம் ஆகும். நிலையான வைப்புக்கள் குறுகிய காலத்திற்கு (7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை) கிடைக்கின்றன.
பிபிஎஃப்-ஐ விட அதிக வட்டி வழங்கும் வங்க எஃப்.டி.கள்
1) பாங்க் ஆஃப் பரோடா FD: இது பொதுக் குடிமக்களுக்கு 7.05% வரை நிலையான வைப்பு வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.55% வரை வட்டியையும் வழங்குகிறது.
2) ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி FD: இது பொதுக் குடிமக்களுக்கு 7.25% வரை நிலையான வைப்பு வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை வட்டியையும் வழங்குகிறது.
3) ஆக்சிஸ் வங்கி FD: இது பொதுக் குடிமக்களுக்கு 7.10% வரை நிலையான வைப்பு வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.85% வரை வட்டியையும் வழங்குகிறது.
4) பாரத ஸ்டேட் வங்கி FD: இது பொதுக் குடிமக்களுக்கு 7.10% வரை நிலையான வைப்பு வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.60% வரை வட்டியையும் வழங்குகிறது.
5) ஐசிஐசிஐ வங்கி FD: இது பொதுக் குடிமக்களுக்கு 7.10% வரை நிலையான வைப்பு வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.60% வரை வட்டியையும் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“