Best tax-saving mutual funds | ஜூலை 2024 இல் முதலீடு செய்ய ஏற்ற இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் என அழைக்கப்படும் சிறந்த வரி-சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் இங்கு உள்ளன.
வரிச் சேமிப்பு முதலீட்டு விருப்பங்களைப் பொறுத்தவரை, ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS) இரட்டைப் பலன்களை வழங்குகின்றன.
இந்தப் ஃபண்டுகள் பிரிவு 80C இன் கீழ் பங்கு முதலீடுகள் மற்றும் வரி விலக்குகளுடன் வருகின்றன. லாக் இன் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
இ.எல்.எஸ்.எஸ் அதிக வருமானம் பெறும் வாய்ப்பு மற்றும் வரி சேமிப்பு நன்மைகளை வழங்குகிறது. இதனால் பெரும்பாலும் முதலீட்டாளர்கள் இதனை விரும்புகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டில் முதல் 5 வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்க்கலாம்.
மேலும், முதலீட்டாளர்கள் கடந்த மூன்று வருடங்கள், ஐந்து வருடங்கள் மற்றும் 10 வருடங்களில் இந்த ஃபண்டுகளின் வருமானத்தையும் ஒப்பிடலாம். கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
பேங்க் ஆஃப் இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
- 1 ஆண்டு வருமானம்: 61.62%
- 3 ஆண்டு வருமானம்: 24.69%
- 5 ஆண்டு வருமானம்: 30%
- 10 ஆண்டு வருமானம்: 20.19%
குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
- 1 ஆண்டு வருமானம்: 60.92%
- 3 ஆண்டு வருமானம்: 28.33%
- 5 ஆண்டு வருமானம்: 36.18%
- 10 ஆண்டு வருமானம்: 25.81%
மோதிலால் ஓஸ்வால் வரி சேமிப்பு ஃபண்டு
- 1 ஆண்டு வருமானம்: 60.39%
- 3 ஆண்டு வருமானம்: 26.57%
- 5 ஆண்டு வருமானம்: 25.46%
- ஜனவரி 2015 இல் தொடங்கப்பட்டதிலிருந்து: 19.87%
ஐ.டி.ஐ இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
- 1 ஆண்டு வருமானம்: 59.03%
- 3 ஆண்டு வருமானம்: 22.15%
- அக்டோபர் 2019 இல் தொடங்கப்பட்டதிலிருந்து: 23.63%
எஸ்.பி.ஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்டு
- 1 ஆண்டு வருமானம்: 57.96%
- 3 ஆண்டு வருமானம்: 28.67%
- 5 ஆண்டு வருமானம்: 25.88%
- 10 ஆண்டு வருமானம்: 17.22%
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு பலன்கள்
இ.எல்.எஸ்.எஸ் (ELSS) நிதிகள் குறைந்தபட்ச லாக்-இன் காலமான 3 வருடத்துடன் வருகின்றன. முதலீட்டில் குறைந்தது 80% பங்குகளுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும், இந்த முதலீடுகள் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்குகளுக்கு தகுதியுடையவை.
Disclaimer: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் எந்த குறிப்பிட்ட முதலீட்டு கருவிகளையும் அங்கீகரிக்கவில்லை. முதலீட்டாளர்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், மியூச்சுவல் ஃபண்டு திட்ட முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. ஆகவே, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விதிமுறைகளையும் கவனமாக படிக்கவும். மேற்கூறிய தரவுகள் கடந்தகால வருவாய் மட்டுமே; இது நிகழ்கால வருவாய்க்கு எவ்விதத்திலும் உறுதியளிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.