நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் சில மாற்றங்களை அமல்படுத்தினார்.
அதில், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமும் அடங்கும்.
மாதாந்திர சேமிப்பு திட்டம்
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) வாடிக்கையாளர்களுக்கு மொத்தப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் தற்போது, முதலீட்டு வரம்பு ஒரு கணக்கிற்கு ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கிற்கு ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது, அதே நேரத்தில் வட்டி விகிதம் 7.10 சதவீதமாக உள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மேலும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கு தற்போது 8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் ஆகும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
பெண் குழந்தைகளுக்கான இந்தப் பிரத்யேக திட்டத்தை ரூ.250 செலுத்தி தொடங்கலாம். இதற்கு 7.6 வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், ரூ.250 செலுத்தி கணக்கு தொடங்கி மாதம் ரூ.1000 வீதம் முதலீடு செய்து முதிர்வு காலத்தில் ரூ.5 லட்சம் வரை ரிட்டன் பெறலாம்.
கிசான் விகாஸ் பத்ரா
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் 7.2 சதவீத வருமானத்தை வழங்குகிறது மற்றும் ரூ.1000 முதல் முதலீடுகளை அனுமதிக்கும், தொகை ரூ.100 மடங்குகளில் இருக்கும். முதலீடு செய்யப்பட்ட பணம் 120 மாதங்களில் இரட்டிப்பாகும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) என்பது ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும், இது முதலீட்டில் 7.00 சதவீத லாபத்தை வழங்குகிறது.
இது ரூ.1,000 முதல் ரூ.100 வரை, மடங்குகளில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது. மொத்த முதலீட்டு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/