இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளை போன்று வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களையும் (என்பிஎஃப்சி ஒழுங்குபடுத்துகிறது.
எனினும் முதலீடு என்று வரும்போது, மிகப் பெரிய பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெற்ற நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வது பொருத்தமானது.
1) பஜாஜ் ஃபைனான்ஸ் எஃப்டி வட்டி விகிதங்கள்
பஜாஜ் ஃபின்சர்வ் வட்டி விகிதம் 7.70% முதல் 8.60% வரை 15 மாதங்கள் முதல் 44 மாதங்கள் வரையிலான மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்குகிறது.
வழக்கமான டெபாசிட்டுகளில், மூத்த குடிமக்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் வட்டி விகிதம் 7.65% முதல் 8.30% பெறலாம்.
2) முத்தூட் ஃபைனான்ஸ் FD வட்டி விகிதங்கள்
முத்தூட் ஃபைனான்ஸ், முத்தூட் கேப்பின் கீழ் வட்டியை வழங்குகிறது, வருடாந்திர வட்டி திட்டத்துடன் கூடிய மொத்த வைப்புத்தொகைக்கு 6.25% முதல் 7.25% வரை கிடைக்கிறது.
3) LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் FD வட்டி விகிதங்கள்
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், ரூ.20 கோடி வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஒட்டுமொத்த வைப்புத்தொகைகளுக்கு, LIC HFL 7.25% முதல் 7.75% வரை வழங்குகிறது.
4) சுந்தரம் ஃபைனான்ஸ் FD வட்டி விகிதங்கள்
இந்த ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதங்களை வழக்கமான குடிமக்களுக்கு 7.60% முதல் 8.50% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதலாக (ஜூப்ளி FD உட்பட) 8% முதல் 9% வரையிலும் வழங்குகிறது.
5) ஐசிஐசிஐ ஹோம் ஃபைனான்ஸ் FD வட்டி விகிதங்கள்
ஐசிஐசிஐ ஹோம் ஃபைனான்ஸ், மூத்த குடிமக்களுக்கு 7.25% முதல் 7.75% வரை நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வருடாந்திர வருமானத் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக அல்லாத வைப்புகளுக்கு வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்புத்தொகைகளில் 7.65% முதல் 7.85 வரை வருடாந்திர திட்டத்தின் கீழ் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“