வாடிக்கையாளர்கள் வட்டி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்குகின்றனர்.
தொழிலாளர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள், வங்கியின் மூலம் சேமிப்பு கணக்கு வழங்குகின்றன. பொதுவாக இந்தக் கணக்குகள், தொழிலாளர்கள் பணி அல்லது இடமாறுதல் , நிறுவனம் மாறுதல் போன்ற நிகழ்வுகளால் செயல்படாமல் ஆகக் கூடும்.
சில நேரங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கிய நபர்களால் அந்தக் கணக்கை தொடர முடியாமல் போகலாம். இதுபோன்ற சூழல்களில் வங்கிக் கணக்கை மூடுவதே சிறந்தது.
இருப்பினும் இருப்புக் கணக்கை மூடுவதற்கு முன்னர் நீங்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அது பற்றி தற்போது பார்ப்போம்.
- கணக்கு நிதிநிலை அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
ஒரு குறிப்பிட்ட சேமிப்புக் கணக்கை மூடுவதற்கு முன், உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்த்து, எதிர்காலத்துக்கு தேவையான அனைத்து அறிக்கைகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இது, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் சரியான தகவல்கள் இல்லாதபடசத்தில் வருமான வரி அறிக்கையில் தவறான தகவல்களை அளிக்கக் வாய்ப்புகள் உள்ளன.
- தானியங்கி பேமெண்களை ரத்து செய்தல்
மக்கள் தங்கள் சேமிப்புக் கணக்கு மூலம் கடன் EMIகள், பில் செலுத்துதல்கள், மாதாந்திர சந்தாக்கள் போன்றவற்றிற்கான நிலையான வழிமுறைகளை வழங்குகிறார்கள்.
ஆகவே இதில் கவனம் தேவை. இவ்வாறு எதுவும் அளிக்கப்படவில்லை என்றால் ணக்கு மூடல் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, விவரங்களைப் பூர்த்தி செய்து, வங்கியின் கிளையில் சமர்ப்பித்து, அதிக சிரமமின்றி கணக்கை மூடலாம்,
- கணக்கு மூடல் கட்டணங்களை சரிபார்க்கவும்
கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு மூடல் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய பல்வேறு வங்கிக் கணக்குகள் உள்ளன. கணக்கு தொடங்கிய ஒரு வருடத்திற்குள் கணக்கு மூடப்படும் போது இது பெரும்பாலும் நிகழ்கிறது.
இருப்பினும், கணக்கு தொடங்கி ஒரு வருடம் கழித்து மூடப்பட்டால், மூடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. எடுத்துக்காட்டாக, கணக்கு தொடங்கிய 14 நாட்களுக்குள் சேமிப்புக் கணக்கு மூடப்பட்டால் எஸ்பிஐ கட்டணம் வசூலிக்காது. இருப்பினும், நீங்கள் சேமிப்புக் கணக்கை 14 நாட்களுக்குப் பிறகு மற்றும் 1 வருடத்திற்கு முன்பு மூடினால், கணக்கை மூடுவதற்கான கட்டணமாக வங்கியால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
இந்தக் காலம் முடிவடையவில்லையெனில் உங்கள் கணக்கை மூடுவதை தவிர்க்கவும்.
- உங்கள் சேமிப்புக் கணக்கை பல்வேறு போர்ட்டல்களில் இருந்து நீக்கவும்
EPFO, வருமான வரித் துறை போன்ற நிறுவனங்களில் இருந்து சேவைகளைப் பெற வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குகளை இணைக்கிறார்கள்.
மேலும், உங்கள் வங்கிக் கணக்கை EPFO உடன் இணைக்கவில்லை என்றால், பகுதியளவு திரும்பப் பெறுதல், EPF பரிமாற்றம் போன்ற பல்வேறு ஆன்லைன் சேவைகளைப் பெற முடியாது.
அதேபோல், வருமான வரி அறிக்கை படிவத்தில் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கவில்லை என்றால், உங்கள் ITR தாக்கல் செய்யப்படாது.
எனவே, மூடப்படும் சேமிப்புக் கணக்கின் கணக்கு எண்ணை நீங்கள் ஏற்கனவே வழங்கியிருந்தால், ஏற்கனவே உள்ள கணக்கை மூடுவதற்கு முன் மற்றொரு கணக்கு எண்ணைப் புதுப்பிக்க வேண்டும்.
- மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான சேமிப்புக் கணக்கு விவரங்களைப் புதுப்பித்தல்
ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை மீட்டெடுக்கும்போது, அந்தத் தொகை முதலில் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் (AMC) கணக்கிற்கு மாற்றப்படும். பின்னர் அது முதலீட்டாளரின் கணக்கில் செலுத்தப்படும்.
அப்போது, நீங்கள் மூட உத்தேசித்துள்ள கணக்கின் விவரங்களை வழங்கியிருந்தால், உங்கள் மீட்பு நிறுத்தி வைக்கப்படும்.
புதிய கணக்கு விவரங்களைச் சேர்க்கும் வரை அது அழிக்கப்படாது, இது பணம் பெறுவதில் தாமதத்திற்கு வழிவகுக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.