வாடகை வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு நபரின் கனவும், சொந்த வீட்டில் குடியேறுவது தான். சம்பாதிக்கும் தொகையில் சிறு பங்கு வீடு வாங்க சேமித்து வைப்பவர்களும் உண்டு. அவர்களின் கனவை நினவாக்கும் வகையில், பல வங்கிகள் ஹோம் லோனில் கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்குகின்றனர்.
குறிப்பாக பண்டிகை காலங்களில், வங்கிகள் போட்டிப்போட்டு கொண்டு சலுகைகளை வாரி வழங்குவார்கள். அதனை பயன்படுத்துவது தான் சிறந்து சாய்ஸ். இருப்பினும், ஹோம் லோனில் வட்டி விகிதங்களை ஆராய்வது அவசியமாகும். எனவே, வீடு வாங்க முடிவு செய்தால், ஹோம் லோனுக்காக வங்கியை அணுகுவதற்கு முன்பு இந்த 5 விஷ்யங்களை ஒருமுறை பார்த்துக்கொங்க.
- ஹோம் லோன் தொகை முடிவு செய்வது எப்படி?
வீட்டுக் கடனின் அளவு உங்கள் வருமானம், வயது, கிரெடிட் ஸ்கோர், கடனின் காலம் போன்ற சில காரணிகளைப் பொறுத்து தான் முடிவு செய்யப்படுகிறது. கடனின் அளவைத் தீர்மானிப்பதில் வருமானம் மிகப்பெரிய பங்கு வகிக்கும். அதனால், கடனுக்கான இணை விண்ணப்பதாரராக உங்கள் மனைவியின் வருமானத்தைக் காட்டலாம். இது ஹோம் லோனில் நீங்கள் எதிர்பார்த்த தொகை கிடைத்திட வழிவகுக்கும். உங்களின் கைக்கு கிடைக்கும் சம்பள தொகையில் மாதம் 50 விழுக்காடு வரை ஈஎம்ஐ வாயிலாக செலுத்தும் வகையில் வங்கிகள் கடன் தொகை திட்டமிடலாம். ஹோம் லோன் பெற உங்களின் தகுதி அதிகரிக்கும் பட்சத்தில், ஈஎம்ஐ குறைக்கப்படும். எனவே, இணையத்தில் ஹோம் லோன் தகுதி கேல்குலேட்டரை பயன்படுத்தி கணக்கிட்டு கொள்ளலாம். அல்லது ஹோம் லோன் தொகை முடிவு செய்வதற்கு முன்பு 3 அல்லது 4 வங்கிகளில் நன்கு விசாரித்து குறைந்த ஈஎம்ஐ தொகைக்கு ஓகே சொல்லும் வங்கியை தேர்வுசெய்யுங்கள்
- வட்டி விகிதம்
நீங்கள் வீட்டுக் கடனுக்காக வங்கியை அணுகினால், வட்டி விகிதங்களை கணக்கிடுவதில் RBI Repo விகிதம் முக்கிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு முறையும், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில், வீட்டுக் கடன் வட்டி விகிதத்திற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றத்தைக் காணலாம். எனவே , கடன் பெறுவதற்கு முன்பு வங்கி ரேப்போ வட்டி விகித்ததை கேட்டறிவது நல்லது. அதனடிப்படையில், உங்களுக்குப் கிடைக்கும் வட்டி விகிதம் எவ்வளவு என்று பார்த்திட முடியும். ரேபா வட்டி வகிதம் அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும், கடன் வாங்குபவர்களுக்கு கடன் தொகை, தவணைக்காலம் போன்றவற்றைப் பொறுத்து விகிதம் மாறுபடலாம்.
வீட்டு நிதி நிறுவனங்கள் அல்லது NBFC களின் விஷயத்தில், கடன் விகிதம் முதன்மையாக அவற்றின் நிதிச் செலவை அடிப்படையாகக் கொண்டது ஆகும். எனவே, குறைந்த ரேப்போ வட்டி விகிதம் கொண்ட வங்கிகளை அணுகி ஹோம் லோன் வட்டி விகிதத்தை முடிவுசெய்யுங்கள்.
- கிரெடிட் ஸ்கோர்
உங்களது கிரெடிட் ஸ்கோரின் மதிப்பு, வங்கி குறைந்த வட்டியில் லோன் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 750க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்கள், குறைந்த வட்டிவிகிதத்தில் ஹோம் லோனை பெறலாம். பல வங்கிகளுக்கு, கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலே லோன் வழங்குகின்றனர். உங்களின் ஸ்கோர் 750க்கும் கீழே இருக்கும் பட்சத்தில், வங்கியில் லோனுக்காக செல்வதற்கு முன்பு அதனை அதிகரிப்பதற்கான வழிகளை மேற்கொள்ளுங்கள்
- டவுன்பேமென்ட்
வங்கிகள், நீங்க வாங்க விரும்பும் வீட்டின் மதிப்பில் 80 முதல் 90 விழுக்காடு வரை கடன் தொகையாக வழங்குவார்கள். மீதமிருக்கும் தொகை, நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்படி, வீட்டிற்கு நீங்கள் முதலீடு செய்யும் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில், வங்கியிடமிருந்து குறைந்த அளவில் கடன் பெறுகையில் வட்டி தொகையும் குறையும். ஆரம்பத்திலே பெரிய அளவில் தொகை இல்லையென்றாலும், ஒரிரு மாதங்களில் கடனில் பெரிய தொகையை செலுத்திவிட்டால், மீதமிருக்கும் தொகைக்கான வட்டி விகிதம் குறையக்கூடும்
- ஆவணங்கள்
உங்களின் வருமானம் தொடர்பான சான்றிதழ், சம்பளம் வாங்குபவர், தொழிலதிபரா என்பதைப் பொறுத்து மாறுபடும்.சம்பளம் வாங்குபவர்களாக இருந்தால், படிவம் 16 அல்லது கடந்த 3 ஆண்டுகளாக ஐடிஆர் தாக்குதல் செய்த அறிக்கை, வங்கி அறிக்கை போன்றவை கேட்கப்படும். வருமானத்தின் ஆதாரத்தை பொறுத்து, சான்ழிதழ் மாறுப்படும். தொழிலதிபராக இருந்தால், கடந்த 3 ஆண்டு லாப, நஷ்ட அறிக்கைகளை வங்கிகள் சமர்ப்பிக்க கூறலாம்.
எனவே, ஹோம் லோனுக்காக வங்கிகளை அணுகுவதற்கு முன்பு மேலே குறிப்பிட்டுள்ள விஷ்யங்களை ஆராய்ந்துகொள்வது நல்லது. வட்டி விகிதத்தில் ஏற்படும் சிறிய மாற்றத்தால், லட்சகணக்கான பணத்தை சேமிக்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil