/tamil-ie/media/media_files/uploads/2023/03/whiskey-price.jpg)
ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை உள்ள 5 விஸ்கி பிராண்டுகளை பார்க்கலாம்.
அன்பீட்டட் விஸ்கிகள் மது பிரியர்களால் விரும்பி ருசிக்கப்படுகிறது. இந்த விஸ்கிகள் தயாரிப்பு சற்று வித்தியாசமானவை.
இந்நிலையில், இன்று, உங்கள் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய 7 அன்பீடட் சிங்கிள் மால்ட் விஸ்கி குறித்து பார்ப்போம்.
1) புஷ்மில்ஸ் 12 ஆண்டு ஒற்றை மால்ட் (Bushmills 12 Years Single Malt)
உலர்ந்த பழங்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றின் சுவையான வாஃப்ட்களுடன் இந்த விஸ்கி தயாரிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.7,400 ஆகும்.
2) ஷெர்ரி சிங்கிள் மால்ட் விஸ்கி
ஷெர்லி பழம் மற்றும் பார்லி உள்ளிட்ட பொருள்களுடன் இந்த விஸ்கி தயாரிக்கப்படுகிறது. இதில் லேசான இயற்கை இனிப்பு இருக்கும். உற்சாகமூட்டும் இந்த விஸ்கியின் விலை ரூ.5420 ஆகும்.
3) க்ளென் கிராண்ட் 12- ஆண்டு ஸ்காட்ச் (Glen Grant 12-Year-Old Scotch)
இந்த 12 ஆண்டு சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கியின் விலை ரூ.6800 ஆகும். பழங்கள், ஆரஞ்சு மற்றும் ஆப்பிள்களின் கலவையில் தயாரிக்கப்படுகிறது. விழா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் மதுப் பிரியர்களின் சிறப்பு தேர்வாக இது உள்ளது.
4) சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி
தேன் மற்றும் வெண்ணிலா ஃபட்ஜ் ஆகியவற்றின் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.9900 ஆகும். ஷெர்ரி ஓக், செவ்வாழை, இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி ஆகியவற்றின் கலவையும் இந்த விஸ்கியில் உள்ளது.
5) கிளீன்மோரெஞ்ச் ஓரிஜினல்
இந்த விஸ்கியின் விலை ரூ.7420-ல் இருந்து தொடங்குகிறது. இதில், எலுமிச்சை, நெக்டரைன் மற்றும் ஆப்பிள் ஆகியவை உள்ளன.
இது மென்மையாகவும் மால்ட்டியாகவும் இருக்கும். இந்த சுவையான விஸ்கி மிகவும் திருப்தியை வழங்குவதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.