முதலீடு என்று வரும்போது, மூத்தக் குடிமக்கள் தங்களுடைய பணத்தை பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
இதில், மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது அஞ்சலகம் வழங்கும் 9 சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும்.
அந்த வகையில், 60 வயதை கடந்த எந்தவொரு நபரும் மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் அல்லது வங்கி மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் வட்டி- காலம்
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதனை, 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். தற்போது எஸ்சிஎஸ்எஸ் 8.2 சதவீத உத்தரவாத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்த வட்டி விகிதங்கள் ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. முதலீடு செய்தவுடன் வட்டி விகிதம் காலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் ₹30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட்
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (SBI), 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 4% முதல் 7.50% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
5 வருட டெபாசிட்டுக்கு மூத்த குடிமக்களுக்கு எஸ்.பி.ஐ 7.25% வட்டி வழங்குகிறது. இந்த விகிதங்கள் கடைசியாக 27 டிசம்பர் 2023 அன்று திருத்தப்பட்டன. இது தவிர பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன.
வங்கி எஃப்.டி vs எஸ்.சி.எஸ்.எஸ்
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களைப் பற்றி பேசினால், மூத்தக் குடிமக்கள் கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். இது பொதுமக்களை விட 0.50% அதிகமாக இருக்கும்.
எஸ்சிஎஸ்எஸ் (SCSS) 8.2% ரிட்டன் கொடுக்கும்போது, எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி முறையே 7.25% மற்றும் 7% வட்டி கொடுக்கின்றன.
ஹெச்டிஎஃப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) வங்கிகள் ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புத்தொகையில் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“