Recurring Deposit Account | Post Office Savings Scheme | இந்தியாவில் அஞ்சல சேமிப்பு திட்டத்தை பலரும் விரும்புகின்றனர். இந்தத் திட்டங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விருப்பத் தேர்வாக உள்ளன.
இதற்கு, உத்தரவாதமான வருமானம் மற்றும் முதலீடு பாதுகாப்பு முக்கியமாகதாக காணப்படுகிறது. அந்த வகையில், முதலீட்டாளர்கள் பலரும் விரும்பும் தபால் அலுவலகத்தின் ஆர்.டி. திட்டம் குறித்து பார்க்கலாம்.
போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி. திட்டம்
அஞ்சல் அலுவலக ஆர்.டி திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில், காலாண்டு அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம், 6.7 சதவீத ஆகும்.
இத்தகைய சூழ்நிலையில், போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி. திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.7000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சமும், 10 ஆண்டுகளில் சுமார் ரூ.12 லட்சமும் சேர்க்கலாம்.
திட்டத்தின் கணக்கீடு
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.7000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4,20,000 முதலீடு செய்வீர்கள்.
இதில் உங்களுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், கணக்கீட்டின்படி, 5 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.79,564 வட்டி மட்டுமே கிடைக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் வட்டியைக் கூட்டினால், உங்கள் முதிர்வுத் தொகை ரூ. 4,99,564 அதாவது சுமார் ரூ. 5 லட்சமாக இருக்கும்.
அதேசமயம், இந்த ஆர்டியை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், நீங்கள் சுமார் ரூ.12 லட்சத்தைச் சேர்க்கலாம்.
அதாவது, உங்கள் மொத்த முதலீடு ரூ.8,40,000 ஆக இருக்கும். இதற்கு, 6.7 சதவீத வட்டியில், 3,55,982 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“