போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி திட்டம்: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ஒரு மொத்தமாக முதலீடு செய்ய முடியாத முதலீட்டாளர்களுக்கு ஆர்.டி. திட்டங்கள் வரப்பிரசாதமாக உள்ளன. இந்தத் திட்டங்களில் மாதம் ரூ.100 முதல் சேமிக்கலாம்.
தற்போது அஞ்சலக ஆர்.டி. திட்டங்களுக்கு 6.7 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000, ரூ.3,000 மற்றும் ரூ.5,000 டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு
மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் முதலீடு செய்து இருப்பீர்கள். முதிர்ச்சியின்போது ரூ.356830 கிடைக்கும். அதாவது வட்டியாக மட்டும் ரூ.56,830 கிடைக்கும்.
ரூ.3 ஆயிரம் முதலீடு
ஆர்.டி திட்டத்தில் மாதம் ரூ.3 ஆயிரம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.180000 சேமித்து இருப்பீர்கள். வட்டியாக ரூ.34,097 கிடைக்கும். ஆக முதிர்ச்சியின்போது ரூ.2,14,097 கிடைக்கும்.
ரூ.2 ஆயிரம் முதலீடு
அர்.டி திட்டத்தில் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.120000 சேமித்து இருப்பீர்கள். வட்டியாக 22,732 கிடைக்கும். 5 ஆண்டுகளில் 1,42,732 கிடைக்கும்.
(குறிப்பு : போஸ்ட் ஆபிஸின் தற்போதைய வட்டி விகிதத்தின் அடிப்படையில் இந்தக் கணக்கீடு உள்ளது. போஸ்ட் ஆபிஸின் வட்டி ஒவ்வொரூ 3 மாதத்துக்கு ஒருமுறையும் திருத்தப்படும்)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“