Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு உயர் வட்டி வழங்கும் 6 வங்கிகள்; செக் பண்ணுங்க!

ஆக்சிஸ் வங்கி அதன் ஓராண்டு டெபாசிட்களில் ₹2 கோடிக்கும் குறைவான தொகைக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்குகிறது. 2 வருட டெபாசிட்களின் வட்டி விகிதம் 7.10 சதவீதம் ஆகும்.

author-image
WebDesk
New Update
HDFC Banks special FD for senior citizens with higher interest rate will end soon

ஹெச்டிஎஃப்சி வங்கி ஒரு வருட கால டெபாசிட் திட்டங்களுக்கு சாதாரண குடிமக்களுக்கு 6.60 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

அந்த வகையில், வெவ்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகளின் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை இங்கே உள்ளன.

Advertisment

6 வங்கிகளின் ஓராண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்

  • ஆக்ஸிஸ் வங்கி 6.7
  • எஸ்பிஐ 6.8
  • ஆக்ஸிஸ் வங்கி 6.7
  • கோடக் மகிந்திரா 7.10
  • பேங்க் ஆஃப் பரோடா 6.85
  • ஐசிஐசிஐ வங்கி 7.4
  • ஹெச்டிஎஃப்சி வங்கி 6.6

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, 2-3 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி அதன் ஓராண்டு டெபாசிட்களில் ₹2 கோடிக்கும் குறைவான தொகைக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்குகிறது. 2 வருட டெபாசிட்களின் வட்டி விகிதம் 7.10 சதவீதம் ஆகும்.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா 1-2 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட டெபாசிட்டுகளுக்கு 6.85 சதவீதம் வட்டியை வழங்குகிறது. பேங்க் ஆப் பரோடா வழங்கும் வட்டி விகிதம் 2-3 ஆண்டுகளாக உயரும் போது 7.25 சதவீதமாக உயரும்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி 7.40 சதவீதம் முதல் ஒரு வருட நிரந்தர வைப்புத்தொகைக்கு (எஃப்டி) வட்டி வழங்குகிறது. இந்த டெபாசிட்டின் காலம் 390 நாள்கள் முதல் 15 மாதங்கள் வரை அதிகரிக்கப்படும் போது வட்டி விகிதம் 7.30 சதவீதமாக குறைகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி ஒரு வருட கால டெபாசிட் திட்டங்களுக்கு சாதாரண குடிமக்களுக்கு 6.60 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதமும் வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment