கோடீஸ்வரர் கனவு சாத்தியமே… இந்த 6 ஃபார்முலாவை கவனியுங்க!

முதலீடு செய்வதற்கு ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் பொறுமை தேவை. இதிலிருக்கும் கணித விதிகள் பண மேலாண்மை, முதலீட்டு திட்டமிடல் மற்றும் பல்வேறு நிதி இலக்குகளை அடைவதில் உதவுகின்றன.

உலகில் பிறந்த ஒருவொருக்கும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். அந்த முனைப்புடன் தான் ஒவ்வொருவரும் பணியாற்றுகிறார்கள். ஆனால், சம்பாதிக்கும் பணத்தை மாத இறுதியில் பார்த்தால் செலவுக்கே பத்தாது. இப்படியிருக்கையில் பணத்தை சேமித்து கோடீஸ்வரர் ஆகனும் என்பது இன்னும் பலருக்கு கனவாகவே தான் உள்ளது. இதற்கு ஹார்ட் வோர்க் செய்தால் மட்டும் போதாது ஸ்மார்ட் வோர்க்கையும் களமிறக்க வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை துல்லியமாக சேமித்து கோடீஸ்வரரானாக மாறும் 6 ஃபார்முலாவை இச்செய்தி தொகுப்பில் காணப்போகீறிர்கள்

50-20-30 rule

இந்த திட்டம்படி, நீங்கம் சம்பாதிக்கும் தொகையில் வரி போக மீதமுள்ள தொகையில் 50 சதவிகிதத்தை வீட்டு செலவுக்கும், 20 சதவிகிதத்தை பயணம் செய்வது, கார் செலவும், குழந்தைகள் படிப்பு போன்ற குறுகிய கால தேவைக்கும், 30 சதவிகிதத்தை நீண்டு நாள் பிளேன்க்காகவும் சேமித்து வைக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றினால், தேவைப்படும் நேரத்தில் உங்கள் கைவசம் பணம் இருக்கும்.

15-15-15 rule

இது கோடீஸ்வரர் ஆகுவதற்கான பெஸ்ட் ஃபார்முலா ஆகும். இதில், சம்பந்தப்பட்ட நபர் மாதந்தோறும் ரூபாய் 15 ஆயிரம் பணத்தை, 15 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும். இப்படி சேமிக்கையில் வட்டி பணமாக உங்களுக்கு 15 விழுக்காடு வந்துவிடும். இந்த பார்மூலா பின்பற்றினால், 15 ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரராக இருப்பீர்கள். இதற்கு பல சேமிப்பு திட்டங்கள் மார்கெட்டி உள்ளது. 15 விழுக்காடு வட்டி வருமானம் கிடைக்க வேண்டுமென்றால், முறையான முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட வேண்டும்.

Rule of 72

இது உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் எளிய வழிமுறை. 72ஐ உங்கள் பணத்திற்கு கிடைக்கும் வட்டியுடன் வகுத்தால் எவ்வளவு காலத்தில் பணம் இருமடங்காகும் என்று தெரிந்துவிடும். உதாரணமாக, நீங்கள் பணம் போட்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு ஆண்டுக்கு 15% வட்டி கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். 72ஐ 15ஆல் வகுத்தால் 4.8 வருகிறது. அப்போது, உங்கள் பணம் இருமடங்காக உயர 4.8 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும்.

Rule of 114

இந்த விதி உங்கள் பணத்தை மும்மடங்காக்க உயர்த்துவதற்கான வழியை தருகிறது. மேலே சொன்னது போலவே, ஆண்டுக்கு 15% வட்டி கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். 114ஐ 15ஆல் வகுத்தால் 7.6 வருகிறது. அப்போது, உங்கள் பணம் மும்மடங்காக உயர 7.6 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும்.

Rule of 144

இந்த விதி உங்கள் பணத்தை நான்கு மடங்கு உயர்த்துவதற்கான வழியை தருகிறது. உங்கள் பணத்திற்கு 15 விழுக்காடு வட்டி கிடைக்கும் என்றால், 144ஐ 15ஆல் வகுத்தால் 9.6 வருகிறது. அதன்படி, உங்கள் பணம் நான்கு மடங்காக உயர 9.6 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும்.

வயதிலிருந்து 100ஐ குறையுங்கள்

இந்த விதி சொத்து ஒதுக்கீட்டிற்காக பரிந்துரைக்கப்பட்டது. பங்குகளில் உள்ள எண்ணை அடைய, உங்கள் வயதை 100லிருந்து கழிக்க வேண்டும். 25 வயது நபருக்கு, அவர் முதலீடு செய்யக்கூடிய தொகையில் 75 சதவீதம் பங்குகளில் இருக்கலாம். இந்த விதியின் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், நீங்கள் இளமையாக இருப்பதால், உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய முடியும். வயதுக்கு ஏற்ப, ரிஸ்க் எடுக்கும் திறன் குறைகிறது, அப்போது, அபாயகரமான சொத்து வகுப்பில் முதலீடு செய்வது நல்லதல்ல.

முதலீடு செய்வதற்கு ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் பொறுமை தேவை. மேலே விவாதிக்கப்பட்ட கணித விதிகள் பண மேலாண்மை, முதலீட்டு திட்டமிடல் மற்றும் பல்வேறு நிதி இலக்குகளை அடைவதில் உதவுகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 6 formulas you should know to become a crorepati fast

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com