Advertisment

எஃப்.டி-க்கு 9.1 சதவீதம் வட்டி: மே மாதத்தில் வட்டியை திருத்திய 7 வங்கிகள்!

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு மே மாதத்தில் வட்டியை உயர்த்திய 7 வங்கிகள் குறித்து இதில் பார்க்கலாம். இந்த வங்கிகளில் அதிகப்பட்சமாக ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Hoe to get more income from fixed deposits? - நிலையான வைப்புத் தொகை மூலம் அதிக வருமானம் பெறுவது எப்படி?

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை 7 வங்கிகள் 2024 மே மாதம் திருத்தியுள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பல்வேறு வங்கிகள் மே மாதத்தில் தங்களுடைய ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு வட்டி விகிதத்தை திருத்தியுள்ளன. இவற்றில் எஸ்.பி.ஐ., டி.சி.பி வங்கி, ஐ.டி.எஃப்.சி. ஃபஸ்ட் வங்கி, உட்கர்ஷ் சிறு நிதி வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஆர்.பி.எல்., கேப்பிட்டல் பேங்க் சிறு நிதி வங்கி ஆகிய வங்கிகள் அடங்கும்.

Advertisment

1. ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் வங்கி

ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் வங்கி பொதுக் குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு தற்போது 3% முதல் 7.90% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மூத்தக் குடிமக்களுக்கு, ஆண்டுக்கு 0.50% கூடுதல் வழங்குகிறது. மேலே உள்ள விகிதத்தில், வட்டி விகிதம் 3.50% முதல் 8.40% வரை மாறுபடும். 

அதிகபட்ச வட்டி விகிதம் 8% மற்றும் 8.40% 500 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எஃப்டி களுக்கு 8.4% விகிதம் கிடைக்கும். புதிய எஃப்டி வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. 

2. சிட்டி யூனியன் வங்கி

சிட்டி யூனியன் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கான எஃப்எ வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது.   பொதுக் குடிமக்களுக்கு 5 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையிலும் மூத்த குடிமக்களுக்கு 5 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையிலும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

400 நாள்களில் முதிர்ச்சியடையும் திட்டத்திற்கு அதிகபட்ச வட்டி விகிதம் 7.25 சதவீதம் மற்றும் 7.75 சதவீதம் வழங்கப்படுகிறது. திருத்தப்பட்ட எஃப்டி வட்டி விகிதங்கள் மே 6, 2024 முதல் அமலில் உள்ளது. 

3. டிசிபி வங்கி எஃப்டி வட்டி விகிதங்கள்

டிசிபி வங்கி ( DCB Bank) ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு வட்டி விகிதங்களை (ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு) திருத்தியுள்ளது.

19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான காலவரையறைக்கு பிறகு, பொது வாடிக்கையாளர்களுக்கு 8% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.55% அதிகபட்ச எஃப்டி வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதிகபட்ச சேமிப்புக் கணக்கு வட்டி விகிதம் 8% வரை வழங்கப்படுகிறது.  புதிய வட்டி விகிதங்கள் மே 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.

4. கேப்பிட்டல் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

கேபிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைக்கான எஃப்டி வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. 

பொது குடிமக்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.55 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்தக் குடிமக்களுக்கு வங்கி 4 சதவீதம் முதல் 8.05 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 400 நாள்களில் முதிர்ச்சியடையும் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. திருத்தப்பட்ட எஃப்டி வட்டி விகிதங்கள் மே 6, 2024 முதல் அமலில் உள்ளது. 

5. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எஃப்.டி

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) சில்லறை டெபாசிட்டுகள் (ரூ. 2 கோடி வரை) மற்றும் மொத்த டெபாசிட்டுகள் (ரூ. 2 கோடிக்கு மேல்) குறிப்பிட்ட காலங்களுக்கு எஃப்டி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. 

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிலையான வைப்பு விகிதங்களை 75 பி.பி.எஸ். வரை உயர்த்துகிறது புதியஎஃப்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.

6. ஆர்.பி.எல். வங்கி 

ஆர்.பி.எல்.  வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கான நிலையான எஃப்டி விகிதங்களை திருத்தியுள்ளது. 18 முதல் 24 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் எஃப்டி -களுக்கு அதிகபட்சமாக 8% வட்டி விகிதம் வழங்குகிறது. 

அதே  எஃப்டி காலப்பகுதியில், மூத்த குடிமக்கள் 0.50% கூடுதல் அதாவது 8.50% சம்பாதிப்பார்கள். மேலும் மிக மூத்த குடிமக்கள் (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) 0.75% அதாவது 8.75% கூடுதல் வட்டி விகிதத்திற்கு தகுதியுடையவர்கள். திருத்தப்பட்ட எஃப்டி வட்டி விகிதங்கள் மே 1, 2024 முதல் அமலில் உள்ளது. 

7. உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதன் எஃப்டி  வட்டி விகிதங்களை ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைக்கு மாற்றியுள்ளது. இதில், பொதுக் குடிமக்களுக்கு வங்கி 4 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்குகிறது. 

மூத்த குடிமக்களுக்கு, வங்கி 4.60 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரை வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 8.50 சதவீதம் மற்றும் 9.10 சதவீதம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. திருத்தப்பட்ட விகிதங்கள் மே 1, 2024 முதல் நடைமுறையில் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment