மூத்தக்குடிமக்களின் உகந்த சேமிப்பு திட்டமாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் பெரும்பாலும் மூத்தக் குடிமக்கள் முதலீடு செய்துள்ளனர்.
இந்தத் திட்டங்கள் பொதுத்துறை வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் என கிடைக்கின்றன.
எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களும் உள்ளன.
மற்ற வங்கிகளில் மூத்தக் குடிமக்கள் சேமிப்புகளுக்கு 50 சதவீதம் வரை கூடுதல் வட்டி வழங்கப்படுகின்றன. எனினும், அதிகமாக ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் வட்டி வழங்குகின்றன.
இந்த நிலையில், ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஈசாஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சர்வோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ஆகியவை மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9 சதவீதம் முதல் 9.11 சதவீதத்திற்கும் மேல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
பொதுவாக ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் ரூ.5 லட்சம் வரையிலான நிலையான வைப்புகளில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“