/tamil-ie/media/media_files/uploads/2019/02/cash_thinkstock-759.jpg)
Income Tax Returns
பண மதிப்பீட்டு நடவடிக்கை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2016-17 ஆம் நிதியாண்டில், புதிதாக 1.06 கோடி பேர் புதிதாக வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் இணைந்துள்ளதாகவும், இது முந்தைய நிதியாண்டை விட 25% அதிகம் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதே நேரத்தில் ஏற்கனவே வருமான வரி செலுத்தி வந்தவர்கள், மேற்கூறிய நிதியாண்டில் அப்படியே நிறுத்தி இருக்கிறார்கள். வரி செலுத்தாத அந்த நபர்கள் இறக்கவோ, அல்லது அவர்களின் பேன் கார்டு ரத்து செய்யப்பட்டதோ இல்லை.
அதே 2015-2016-ஆம் நிதியாண்டில் வரு செலுத்தாமல் நிறுத்தியவர்களின் எண்ணிக்கை 8.56 லட்சம். 2016-2017-ஆம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 88.04. அதாவது முந்தைய ஆண்டை விட 10 மடங்கு நபர்கள் வரி செலுத்துவதை நிறுத்தியுள்ளனர்.
இருபது ஆண்டுகளில் அதாவது 2000-01 ஆண்டிலிருந்துத் தொடங்கி இப்போது தான் இதன் விகிதம் அதிகரித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, 2013-ம் ஆண்டில் 37.54 லட்சம், 2014-ல் 27.02 லட்சம், 2015-ம் ஆண்டில் 16.32 லட்சம் மற்றும் 2016-ம் ஆண்டில் 8.56 லட்சம் என வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை இருந்தது.
எப்போதும் வரி கட்டி வந்தவர்கள் திடீரென நிறுத்தக் காரணம், வேலை இழப்பு, பண மதிப்பீட்டு நடவடிக்கைக்குப் பின் வருமானம் இழப்பு ஆகியவைகள் முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன.
இது குறித்து சி.பி.டி.டி-யிடம் மெயில் செய்து கேட்டபோது, ”குடிபெயர்தல் மற்றும் இறப்பு” ஆகியவற்றின் அடிப்படையில், வரி செலுத்துவோர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பதில் கிடைத்துள்ளது.
தவிர, 2016-17 ஆம் நிதியாண்டில் 33 லட்சம் பேர் டி.டி.எஸ்-க்கு அப்ளை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.