அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 8வது ஊதியக் குழு உறுப்பினர்களை நியமித்த அமைச்சரவை

அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க, 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2026 ஜனவரி மாதத்திலிருந்து ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க, 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2026 ஜனவரி மாதத்திலிருந்து ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
8th Pay Commission

அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 8வது ஊதியக் குழு உறுப்பினர்களை நியமித்த அமைச்சரவை

8-வது ஊதியக் குழுவை அமைப்பதாக அறிவித்த சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது புதிய ஊதியக் குழுவிற்கான விதிமுறைகளுக்கு (Terms of Reference - ToR) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விதிமுறைகள், ஊதியக்குழுவின் செயல்பாடுகளுக்கு செயல்திட்டமாக (Blueprint) இருக்கும். இந்தக் குழு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியக் கட்டமைப்புகள், படிகள் மற்றும் ஓய்வூதியத் திருத்தங்களை ஆய்வு செய்யும்.

Advertisment

ஊதியக் குழுவின் செயல்பாடு மற்றும் காலக்கெடு

மத்திய அரசு தனது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வரை தற்காலிக அமைப்பாகச் செயல்படும் 8-வது மத்திய ஊதியக் குழு, தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பண மற்றும் பணமில்லா பலன்களை மதிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிடும். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, புதிய ஊதியக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க சுமார் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற வழக்கத்தின்படி, 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ஊதியக் குழுவின் அமைப்பு, அதிகாரங்கள் (Mandate) மற்றும் காலக்கெடு ஆகியவை இறுதி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த சி.டி.சி. வடிவமைக்கும் தற்போதைய சம்பள நிலைகள், படிகள், தர ஊதியக் கட்டமைப்புகள், ஓய்வூதியச் சூத்திரங்கள் மற்றும் பிற நிதி கூறுகளை இந்த ஊதியக் குழு ஆராயும் என்று வைஷ்ணவ் தெரிவித்தார்.

குழுவின் அமைப்பு மற்றும் அதிகாரம்

இந்த 3 பேர் கொண்ட குழுவில் ஒரு தலைவர், ஒரு பகுதிநேர உறுப்பினர் மற்றும் ஒரு உறுப்பினர்-செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள். குழு அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். தேவைப்பட்டால், பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டவுடன், இடைக்கால அறிக்கைகளையும் சமர்ப்பிக்க இந்தக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்வது மற்றும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு ஆகியவற்றை மத்திய அரசே இறுதியாக முடிவு செய்யும். பரிந்துரைகள், ஜனவரி 1, 2026 முதல் பின்னேற்புத் (Retrospectively) தேதியுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

Advertisment
Advertisements

பரிந்துரைகளை வழங்குவதற்கான முக்கிய காரணிகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தைத் திருத்துவதற்கு முன், 8-வது ஊதியக் குழுவானது பின்வரும் முக்கியக் காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது: நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலை மற்றும் நிதி ஒழுங்குமுறையைப் பேணுவதன் அவசியம்.

பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்காகப் போதுமான நிதி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்தல். மாநில அரசுகளின் நிதியில் இதன் தாக்கம் எப்படி இருக்கும், நிதிச் சுமை இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் (Unfunded pension schemes) நிதிச் சுமை ஆகியவற்றை இந்தக் குழு ஆய்வு செய்யும். மாநில அரசுகள் பெரும்பாலும் இந்தக் குழுவின் முடிவுகளைப் பின்பற்றுகின்றன. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், பலன்கள் மற்றும் பணி நிலைமைகளை பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மற்றும் தனியார் துறையில் உள்ளவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: