வங்கி vs ஹவுஸிங் ஃபைனான்ஸ்: உங்க வீட்டுக் கடனுக்கு பெஸ்ட் ஆப்ஷன் எது?

வாடிக்கையாளர்களின் கிரெடிட் மதிப்பெண் 750க்கு மேல் இல்லாவிட்டால் வங்கி அதிக பிரீமியத்தை வசூலிக்கக்கூடும்

A bank or an HFC: Which is better for a home loan : வங்கிகள் வீட்டுக்கடன்களை மட்டும் வழங்குவது அல்லாமல் தனிநபர் கடன்கள், கார் லோன், வணிகக் கடன்கள் மற்றும் தங்க நகைகள் மீது கடன்கள் வழங்குகின்றன. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு, வீட்டுக்கடன்களின் ஃப்ளோட்டிங் ரேட் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் போன்ற வெளிப்புற காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வீதம் ஒரு வங்கி வீட்டுக் கடனின் அடிப்படைக் குறியீடாக இருந்தால், முக்கிய கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் போது தங்களின் பொருந்தக்கூடிய கடன் வட்டி விகிதத்தில் விரைவான மற்றும் விகிதாசார மாற்றங்களை வாடிக்கையாளர்கள் காண்பார்கள்.

கடன் வாங்கியவர்களுக்கு ரேட்-கட் பயன்கள் உடனே கிடைக்க இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ரெப்போ விகிதம் அதிகரிக்கும் போது மாதத்தவணைகளும் அதிகரிக்கும் என்பதை ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும். ஓவர் டிராஃப்ட் வசதியுடன் வீட்டுக் கடன், ஸ்டெப்-அப் அல்லது ஸ்டெப்-டவுன் ஈ.எம்.ஐ கட்டண விருப்பங்கள் என்று பல தேர்வுகளுடன் மாதத்தவணை செலுத்தும் பிரிவுகளை வங்கிகள் வழங்குகின்றன. கடன் வழங்க முன்பே ஒப்புக் கொள்ளாவிட்டால் வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு ஒப்புதல் வழங்க கணிசமான காலம் எடுத்துக்கொள்ளும்.

கடன் வாங்குபவர் ஒரு வங்கியில் இருந்து வீட்டுக் கடனைப் பெறுவதற்கான தகுதிக்கான நீண்ட பட்டியலை பூர்த்தி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களின் கிரெடிட் மதிப்பெண் 750க்கு மேல் இல்லாவிட்டால் வங்கி அதிக பிரீமியத்தை வசூலிக்கக்கூடும், இது கடனுக்கான அதிக வட்டி விகிதமாக அறியப்படுகிறது. மேலும், மலிவான வங்கி கடன் விகிதங்கள் பெரும்பாலும் கடன் விண்ணப்பதாரர்கள் பெண்களாக இருந்தால் வழங்கப்படுகிறது.

ஹவுசிங் ஃபைனான்ஸில் இருந்து வீட்டுக்கடன்களை பெறுதல்

வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) வீட்டுக்கடன் அளிப்பதில் தனிச்சிறப்பு மிக்கவை. வீட்டுக்கடன்கள் வழங்குவது மட்டுமே அவர்களின் பணி. எச்.எஃப்.சி கடன்களுக்கான தகுதி வங்கிகளை விட குறைவாகவே உள்ளது. விண்ணப்பதாரரின் வருமான அளவுகோல்கள், கடன் மதிப்பெண், விளிம்பு பணத் தேவை, திருப்பிச் செலுத்தும் காலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அவை பெரும்பாலும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கின்றன. HFC களுடனான கடன் செயலாக்க நேரமும் விரைவாகவும் ஒப்பீட்டளவில் தொந்தரவில்லாமலும் இருக்கும்.

இருப்பினும், எச்.எஃப்.சி வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் அவற்றின் பிரதான கடன் விகிதங்களுடன் சில நேரங்களில் வங்கி வீட்டுக் கடன் விகிதங்களை விட அதிகமாக உள்ளன, இருப்பினும் இந்த நிறுவனங்கள் வழங்கும் மிகக் குறைந்த வட்டி விகிதங்களுக்கிடையிலான இடைவெளி சமீபத்திய மாதங்களில் கணிசமாகக் குறைந்துவிட்டது. செயலாக்க கட்டணம் மற்றும் அபராதங்கள் வங்கிகளைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. எச்.எஃப்.சிக்கள் தங்கள் வட்டி விகிதங்களை அவற்றின் பிரதான கடன் விகிதங்களுடனேயே செலுத்துவதால், ரெப்போ வீதத்தின் வீழ்ச்சியால் எழும் எந்தவொரு வீதக் குறைப்பு சலுகைகளையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களின் கடன் தேவை எவ்வளவு என்பதில் மிகவும் கவனமாக முடிவை எடுக்க வேண்டும். வெளிப்படையான வட்டி விகிதங்களுடன், செயலாக்க காலத்திற்கு காத்திருக்க முடியும் என்றால், க்ரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால், எதிர்பார்க்கும் அனைத்து தகுதிகளும் இருந்தால் நீங்கள் வங்கிகளில் வீட்டுக்கடன்களை பெற்றுக் கொள்ளலாம். குறைந்த தகுதிகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் நிலையும், நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாத சூழலும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஹவுசிங் ஃபைனான்ஸை அணுகலாம். தற்போது கடனளிக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் நீங்கள் குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்தி வெறு நிறுவனத்தின் சேவைகளை பெறலாம். ஆனால் அதற்கு பதிலாக உங்களின் தேவையை சந்திக்கும் நிறுவனத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: A bank or an hfc which is better for a home loan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express