a super top-up health insurance policy cost : ஆரோக்கியமான வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமானது. நம்முடைய வாழ்வில் ஏதேனும் தடுக்க இயலாத ஒரு சோகம் அரங்கேறும் பட்சத்தில் நம்முடைய வாழ்க்கையையே அது முற்றிலுமாக மாற்றிவிடும். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் குறைவான ப்ரீமியமில் மருத்துவ காப்பீடுகளை எடுத்து வரும் போக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. ஏற்கனவே இருக்கும் காப்பீட்டு திட்டங்களில் தற்போது கூடுதலாக பயன்களை காப்பீட்டாளர்கள் பெற்று வருகின்றனர். இருப்பினும், நம்முடைய முதலீட்டை அதிகப்படுத்தாமல் அதிக அளவில் நன்மைகளைப் பெற ஒரு சிறப்பான வழி உண்டு. நீங்கள் தேர்ந்தெடுத்த விலக்கு வரம்புக்கு மேல் மருத்துவக் கோரிக்கையின் கவரேஜை வழங்குகிறது சூப்பர் டாப்-அப் திட்டம்.
வேறு ஏதேனும் மருத்துவக் கிளைம் பாலிசியின் கீழ் உங்கள் காப்பீட்டுத் தொகையை உங்கள் மருத்துவமனை க்ளைம் பில் மூலம் சமர்பிக்கும் போது, கூடுதலாக ஏற்பட்டுள்ள மருத்துவ செலவுகளை கவனிக்க இந்த திட்டம் கைகொடுக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ரூ. 5 லட்சத்திற்கான சூப்பர் டாப்-அப் ப்ளான்களை வைத்திருக்கின்றீர்கள். அதன் டிடெக்டபில் (deductible) வரம்பானது ரூ. 2 லட்சம் என்று வைத்துக் கொண்டால் ரூ. 2 லட்சத்திற்கும் மேலான மருத்துவ செலவுகளை இந்த சூப்பர் டாப்-அப் பாலிசி பார்த்துக் கொள்ளும். நீங்கள் ஏற்கனவே உள்ள சுகாதாரத் திட்டத்தில் உள்ள டிடெக்டபில் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது, ஏனைய செலவுகளை இந்த டாப்-அப் திட்டம் பார்த்துக் கொள்ளும்.

நீங்கள் எடுத்துள்ள மருத்துவ பாலிசியின் டிடெக்டபில் வரம்பை மீறிய செலவுகளை சமாளிக்கவே இந்த திட்டம் கை கொடுக்கும். அதற்கு கீழே இருக்கும் செலவுகளை நீங்கள் உங்களின் கையில் இருந்தோ அல்லது மருத்துவ பாலிசி கொண்டோ தான் கட்ட வேண்டும். ஒரு சூப்பர்-டாப் திட்டத்தின் கீழ், பல க்ளைகள் பொதுவாக அனுமதிக்கப்படும் மற்றும் முழுத் தொகையும் தீர்ந்தால் மட்டுமே பாலிசி காலாவதியாகிவிடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil