Advertisment

டெல்லி கிரேட்டர் நொய்டாவில் ஜவுளி கண்காட்சி.. கோவை நிறுவனங்களுக்கு அழைப்பு..!

டெல்லி கிரேட்டர் நொய்டாவில் டிசம்பர் 8ஆம் தேதி ஜவுளி கண்காட்சி நடைபெறுகிறது.

author-image
WebDesk
Oct 11, 2022 17:02 IST
New Update
A Textile Fair will be held on 8th December in Greater Noida Delhi

இந்திய ஐ.டி.எம்.இ சொசைட்டியின் தலைவர் ஹரிசங்கர் செய்தியாளர் சந்திப்பு.

இந்திய ஐ.டி.எம்.இ சார்பாக டிசம்பர் 8ஆம் தேதியன்று கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ள மாபெரும் ஜவுளி கண்காட்சி பங்கேற்க கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஜவுளி தொழில் தொடர்பான நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஜவுளித்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீனபோக்கை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில் வரும் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஜவுளி கண்காட்சி நடைபெறுகிறது.

அந்த வகையில், லாப நோக்கமில்லாத இந்திய ஐடிஎம்இ அமைப்பு உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இந்தியா ஐடிஎம்இ என்ற பெயரில் கண்காட்சியை நடத்துகிறது.

இந்தக் கண்காட்சி இந்திய எக்ஸ்போசிஷன் மார்ட் நிறுவனத்தில் நடைபெறுகிறது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.

அப்போது, இந்திய ஐ.டி.எம்.இ சொசைட்டியின் தலைவர் ஹரிசங்கர் கூறுகையில், “இந்தியா ஐ.டி.எம்.இ 2022 கண்காட்சி உயர் தொழில்நுட்ப மிக்க ஜவுளி எந்திரங்கள் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் ஜவுளித் துறைக்கான சேவைகளைக் காட்சிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ளது.

இது ஜவுளி துறைக்கான மிகப்பெரிய சந்தை வாய்ப்பிற்கான "நுழைவாயில் நிகழ்ச்சியாக" இருக்கும். அந்த வகையில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறையை சேர்ந்த அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த கண்காட்சி உலகத் தரம் வாய்ந்த இந்திய எக்ஸ்போசிஷன் மார்ட் நிறுவனத்தில் கிரேட்டர் நொய்டாவில் நடத்தப்படுகிறது.

இதில் ஏராளமான தொழில்நுட்ப மற்றும் ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இந்தக். கண்காட்சி தொழில்துறையில் உள்ள மிகப்பெரிய மற்றும் சிறந்த எந்திர உற்பத்தியாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான அதிகபட்ச சந்தை வாய்ப்புகளை வழங்கும்.

குறிப்பாக ஆறு நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, வங்கதேசம், பெல்ஜியம், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேசியா , ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 1100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பார்கள்” என்றார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment