A wonderful savings plan that gives 15 lakhs: சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் முதல் அனைவருக்கும் சேமிப்பு என்பது கட்டாயமாக கருதப்படுகிறது. ஒரு மனிதர் அவ்வளவு வருமானம் ஈட்டுகிறார் என்பதை விட அவர் எவ்வளவு சேமிக்கிறார் என்பது மிக முக்கியமாகும். இன்றைய சூழலில் பண வீக்கம் அதிகரித்து வரும் நிலையில், நிலையான சேமிப்பு இன்றியமையாததாக மாறிவிட்டது.
குறிப்பாக, வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் என நம் சேமிப்பை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான இடத்தை தேர்வு செய்வது அவசியம். அதனடிப்படையில், அஞ்சல் அலுவலகங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைவான அளவு முதலீடு செய்தாலும் அதிக லாபம் தரக் கூடிய சேமிப்பு திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
அஞ்சல் அலுவலகங்களில் இருக்கும் சேமிப்பு திட்டங்களுக்கு 80C போன்ற வரிமான வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும், அஞ்சல் அலுவலக வைப்பு நிதி திட்டத்தில் ஒருவர் ரூ. 5 லட்சத்தை டெபாசிட் செய்து ரூ. 15 லட்சம் வரை லாபமாக பெற முடியும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதற்காக, அஞ்சல் அலுவலக வைப்பு நிதி திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி இதற்காக 7.5 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தால் வட்டியாக மட்டும் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 974 கிடைக்கும். டெபாசிட் செய்த தொகையுடன் கணக்கிட்டால் ரூ. 7 லட்சத்து 24 ஆயிரத்து 974 வருமானமாக இருக்கும்.
இந்த மொத்த தொகையையும் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்தால். ரூ. 5 லட்சத்து 51 ஆயிரத்து 175 கிடைக்கப் பெறும். டெபாசிட் செய்யப்பட்ட தொகையையும் சேர்த்துப் பார்த்தால் ரூ. 10 லட்சத்து 51 ஆயிரத்து 175-ஐ முதிர்வு காலத்தில் பெறலாம்.
இதன் மூலம் அஞ்சல் அலுவலகத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 15 லட்சம் வருமானமாக கிடைக்கப் பெறுகிறது. எனவே, ஆபத்து இன்றி குறைந்த முதலீட்டில் பொதுமக்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று விரும்பினால், அஞ்சல் வைப்பு நிதி சேமிப்பு திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.