/tamil-ie/media/media_files/uploads/2021/07/aadhar.jpg)
இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சமீபத்தில் ஆதார் அட்டை தொடர்பாக ஒரு பெரிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஆவணங்களில் ஒன்றாக மாறிவருகிறது ஆதார் அட்டை. ஒரு இந்தியரைப் பொறுத்தவரை, இது ஒரு அடையாள ஆவணத்திற்குக் குறைவானதல்ல. அரசாங்க பரிவர்த்தனைகள் முதல் தனிப்பட்ட நிதி நடவடிக்கைகள் வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது.
ஆனால் அனைத்து 12 இலக்க எண்களையும் ஆதார் என்று கருதக்கூடாது என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. மோசடி புகார்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை யுஐடிஏஐ வெளியிட்டுள்ளது.
யுஐடிஏஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு 12 இலக்க எண்ணும் ஆதார் அட்டை எண் அல்ல என்று அந்த பதிவில் கூறியுள்ளது. அடையாள ஆதாரமாக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, உங்களுக்கு ஒருவரின் ஆதார் தேவைப்பட்டால், அந்த நபர் கொடுத்த ஆதார் எண் சரியானதா என்பதை நிச்சயமாக சரிபார்க்கவும்.
#BewareOfFraudsters
— Aadhaar (@UIDAI) July 8, 2021
All 12-digit numbers are not Aadhaar. It is recommended that the Aadhaar should be verified before accepting it as identity proof. Click: https://t.co/cEMwEaiN2C and verify it online in 2 simple steps. #Aadhaar#AadhaarAwareness#Aadharpic.twitter.com/oZdvCwApNY
ஆதார் எண்ணை எவ்வாறு சரிபார்க்கலாம்?
ஆதார் சரிபார்ப்பை ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும். ஆதார் சரிபார்ப்புக்கு, ஒருவர் UIDAI இணையதள பக்கத்தின் லிங்கான Resident.uidai.gov.in/verify க்கு செல்ல வேண்டும். அந்த பக்கத்திற்கு சென்ற பிறகு நீங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும், கேப்ட்சாவை நிரப்பிய பின், சரிபார்ப்பு பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, திரையில் 12 இலக்க எண்ணின் நம்பகத்தன்மையைக் காண்பீர்கள். அது எண்ணைச் சரிபார்க்கவில்லை என்றால், நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
ஆதார் அட்டை உங்கள் பெயர், முகவரி போன்ற அனைத்து முக்கிய தகவல்களையும் வைத்திருப்பதால் உங்கள் வங்கி கணக்குகள் மற்றும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளதால் ஒருவர் அதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.