Aadhaar Bill: இதுவரை வங்கி கணக்கு, மொபைல் எண்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற சட்டத்தில் தற்போது மாற்றம் வந்துள்ளது.இதனை வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் கார்டு முறை அனைவரும் அறிந்த ஒன்று. எங்கு சென்றாலும் ஆதார் கார்டு அவசியம் என்ற நிலைக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் மாறியது. அதுவரை அடையாள ஆவணங்களாக பார்க்கப்பட்டு வந்த வாக்காளர் அடையாள அட்டை தொடங்கி ரேஷன் கார்டு,பான் கார்டு அனைத்தின் தேவையும் அப்படியே சரிந்தது.
ஆதார் இருந்தால் 50,000 வரை பணத்தை எடுக்கலாம்!கொடுக்கலாம்! எப்படி தெரியுமா?
வங்கி கணக்கு ஆரம்பத்தில் தொடங்கி,மொபைல் எண் வாங்க, நகை வாங்க, வீடு வாங்க என அனைத்திற்கும் ஆதார் அவச்சியம் என அறிவிக்கப்பட்டது. அப்படி வங்கி கணக்குடன், மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் கணக்கு துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Rajya Sabha Passes Aadhaar Bill : ஆதார் எண் கட்டாயமில்லை!
மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெயில், மழை என பாராமல் நீண்ட வரிசையில் நின்று ஆதார் இணைப்பு பணிகளை செய்தனர். இந்நிலையில், இனிமேல் இந்த பிரச்சனையில் பொதுமக்களுக்கு இல்லை. நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.
மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன், ஆதார் எண் இணைப்பதற்கு, வாடிக்கையாளர்களுக்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், ஆதார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு, மக்களவையில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது விவாதங்களுக்கு பின் மாநிலங்களவையிலும் ஒப்புதல் அளித்துள்ளது.
இரு அவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திருத்தப்பட்ட சட்ட மசோதாவை மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து அவரது ஒப்புதலை பெறவுள்ளது.வங்கிக் கணக்கை தொடங்கவும், செல்போன் இணைப்பை பெறவும் ஆதார் அட்டையை பொதுமக்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் முக்கிய ஆவணமாக தாக்கல் செய்யதுக் கொள்ளலாம். அது அவர்களின் விருப்பம்.
பான் கார்டு இல்லாதவர்களும் இனி எளிதாக வருமான வரி தாக்கல் செய்யலாம்
மாநிலங்களவையில் ஆதார் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் அட்டை தொடர்பான சட்டம் மக்களுக்கு இசைவானதாக இருக்கும் என்று உறுதியளித்தார்.
எந்த குடிமகனும் ஆதார் அட்டையை காட்ட கட்டாயப்படுத்தப்பட மாட்டார் என்ற போதும், அவரவர் விருப்பத்தின் பேரில் ஆதாரை ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
123 கோடி மக்கள் ஆதார் எண் பெற்றுள்ளனர் என்றும் அவர்களில் 70 கோடி பேரின் செல்போன் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். வங்கிக்கணக்கு தொடங்குவதற்கும், செல்போன் இணைப்பை பெறுவதற்கும், பல்வேறு அரசு சேவைகளிலும் ஆதார் அட்டையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுவதற்கு இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது எனவும் குறிப்பிட்டி இருந்தார்.