Aadhar card update : ஆதார்.. பிறப்பு தொடங்கி இறப்பு வரை இப்போது ஆதார் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. அரசு அலுவலகங்கள் தொடங்கி தனியார் வரை ஆதார் இருந்தால் மட்டும்தான் வேலையே நடக்கும். ஆதார் எண் இருந்தால் மட்டும் தான் நீங்கள் இந்திய நாட்டின் குடிமகன் என்பதே உறுதியாகும்.
அந்த அளவிற்கு ஆதார் சட்டம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. எங்கு சென்றாலும் ஆதார் கேட்பதால் பொதுமக்கள் ஏன்? எதற்கு? என கேள்வி எழுப்பாமலே கேட்ட இடத்தில் எல்லாம் ஆதார் எண்ணை பதிவு செய்து விடுகின்றன. ஆனால் அது உண்மையில் தவறான ஒன்று. கேட்ட இடத்தில் எல்லாம் ஆதார் எண்ணை கொடுப்பதால் வருங்காலத்தில் நீங்கள் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். அல்லது ஏமாற்றபடலாம்.
குறிப்பாக வங்கியில் இருந்து கால் செய்கிறோம் என சில ஆசாமிகள் ஃபோன் செய்து, உங்கள் ஆதார் எண்ணை சரிபார்ப்பதாக கூறி ஆதார் எண்ணை வாங்கி பிறகு உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை உங்களுக்கே தெரியாமல் ஆட்டைய போடுவது இப்போது நடைப்பெற்று வரும் மிகப் பெரிய நூதன திருட்டில் ஒன்று.
உங்கள் அக்கவுண்டில் பணம் இல்லையென்றால் இந்த விஷயம் அப்படியே சென்று விடாது. அவர்கள் உங்களின் அனைத்து விவரங்களை ஆதார் மூலம் தெரிந்துக்கொண்டு நாளைக்கு வேறு எந்தவிதமான செயலுக்கும் உங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்திவிடுவார்கள். ஆதலால் எப்போதும் ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கு முன்பு யோசிங்கள்.
சரி உங்கள் ஆதாரை எப்படி பாதுகாப்பது என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
1.https://resident.uidai.gov.in/find-uid-eid என்கிற லிங்கை பயன்படுத்தி முகப்புப் பக்கத்திலேயே தொலைந்த ஈஐடி/யுஐடி மீட்டெடுப்பதற்கான தேர்வை காணலாம்.
2. தேர்வின் படி ஆதார் எண் (யுஐடி) அல்லது பதிவு எண் (ஈஐடி) தேர்ந்தெடுக்கவும். பின்னர் முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை அதில் பதிவிடவும்.
3. பின்னர் ஓடிபி கேட்டு, அதை பதிவிடவும். அவ்வாறு செய்தவுடன் மொபைலில் ஆதார் அட்டை எண் அல்லது பதிவு அடையாளத்துடன் ஒரு எஸ்.எம்.எஸ் வரும்.
4. பின்னர் https://eaadhaar.uidai.gov.in/ என்கிற இந்த லிங்கை பயன்படுத்தி, ஐ ஹேவ் என்பதன் கீழ் தலைப்பின் கீழ் பதிவு எண் அல்லது ஆதார் எண் என்பதில் பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யவும்.
5. பிறகு ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை உள்ளிடவும். பின்னர் மீண்டும், முழுப்பெயர், அஞ்சல் குறியீடு, பாதுகாப்பு எழுத்துக்கள், மொபைல் எண் ஆகியவற்றைக் கொடுத்து பிறகு ஓடிபி பெறவும்.
6 இப்படி செய்தால் உங்கள் ஆதாரை உங்களை தவிர வேறு யாராலும் ஆன்லைனில் பார்க்க முடியாது.