Aadhaar Card for Cash Transaction : 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரி செலுத்துபவர்கள் எளிமையாகவும், வசதியாகவும் வருமானவரியை தாக்கல் செய்யும் வகையில், ஃபான் மற்றும் ஆதார் அட்டையை பயன்படுத்த நிதியமைச்சர் பரிந்துரைந்துள்ளார். அதாவது இதன்மூலம் ஃபான் கார்டு இல்லாதவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மேற்கோள் காட்டுவதன் மூலம் வருமான வரியை மேலும் அவர்கள் ஃபான் எண்ணை குறிப்பிட வேண்டிய இடங்களில் எல்லாம் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு மக்களுக்கு அளித்திருக்கும் மகிழ்ச்சி தகவலில் ஆதாரும் ஒன்று. அதாவது, 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான ரொக்கப் பணப்பரிவர்த்தனைக்கு இனி பான் எண் கட்டாயம் இல்லை.பான் கார்டுக்குப் பதில் ஆதாரையோ, ஆதாருக்குப் பதில் பான் எண்ணையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டும் வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆதார் அட்டையை ஆஃப்லைனில் உருவாக்குவது எப்படி?
Aadhaar Card for Cash Transaction Beyond Rs 50,000
தற்போது, அனைவரிடமும் ஆதார் அட்டை இருப்பதால், ஒருவர் பான் கார்டு எண்ணைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. வங்கிகளில் ரூ.50,000-த்துக்கும் மேல் பணபரிவர்த்தனை செய்ய, வருமான வரி செலுத்த உள்ளிட்ட பான் கார்டுகள் அவசியம் தேவை என்ற நடைமுறைகளில் அதற்குப் பதிலாக ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
இதுதொடர்பாக பேசிய வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, நாடு முழுவதும் 120 கோடி பேர் ஆதார் வைத்திருப்பதாகவும், 20 கோடி பேரிடம் பான் அட்டை இருப்பதாகவும் தெரிவித்தார்.
பிறந்த தேதியை வைத்து ஆதார் டவுன்லோட் செய்வது எப்படி?
பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் என்பதால், ஆதாரே வசதி மிக்கது என்றும் பான் அட்டை தேவை இல்லை அப்படி என்றால் பான் அட்டை பயன்பாட்டில் இருக்காதா என்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால் ஆதாரும், பான் எண்ணும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். மக்களுக்கு எது வசதியாக இருக்குமோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆதார் வைத்திருப்பவர்களுக்கு ரூ. 30,000 தரும் அரசு! எப்படி பெற வேண்டும் தெரியுமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.