aadhaar card news : அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஆதார் அடையாள அட்டை என்பது மிகவும் முக்கியமானது ஆகும். பல்வேறு அதிகாரப்பூர்வ வங்கி சேவைகளுக்கு இது முக்கியமானதாக அமைந்துள்ளது. 12 இலக்க ஆதார் அடையாள அட்டை எண்களை பயன்படுத்தி உங்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியுமா என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
உங்களின் ஏ.டி.எம். எண்களை வைத்து ஒருவர் எப்படி உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாதோ அதே போன்று தான் உங்களின் ஆதார் அடையாள எண்ணை வைத்து உங்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்யவோ அல்லது பணத்தை எடுக்கவோ முடியாது என்கிறது UIDAI. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள PIN மற்றும் ஓ.டி.பி. எண்கள் ஆகியவற்றை பிறருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளாத வகையில் உங்களின் வங்கிக் கணக்குகள் மிகவும் பத்திரமாக இருக்கும்.
ஆதார் அடையாள அட்டையை மட்டும் வைத்து உங்களின் எந்தவிதமான வங்கி சேவைகளையும் பயன்படுத்தவோ, ஹேக் செய்யவோ இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும், ஆதார் அட்டை எண்ணை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் UIDAI சிறப்பு சேவை ஒன்றை வழங்கி வருகிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் (தேவைகளுக்கு ஏற்ற வகையில்) செய்து கொள்ளலாம். இதனை எப்படி செய்வது என்பதை நாம் இங்கே எளிமையாக காண்போம்.
GETOTP என்றும், உங்கள் ஆதார் அடையாள அட்டையின் இறுதி 4 இலக்க எண்களையும 1947 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு உங்களுக்கு ஒரு ஓ.டி.பி. கிடைக்கும்.
அந்த ஓ.டி.பி. கிடைத்த பிறகு, LOCKUID என்று டைப் செய்து பிறகு உங்கள் ஆதார் அடையாள அட்டையின் இறுதி நான்கு இலக்க எண்களை பதிவு செய்து பிறகு 6 இலக்க ஓ.டி.பிக்களை அனுப்பவும்.
இந்த இரண்டு ஸ்டெப்களும் முடிந்த பிறகு உங்களின் ஆதார் அடையாள அட்டை எண் லாக் செய்யப்பட்டிருக்கும்.
அன்லாக் செய்யவும் இதே வழிமுறைகளை தான் பின்பற்ற வேண்டும். அப்போது லாக் என்பதற்கு பதிலாக UNLOCKUID என்று மேலே கூறிய வழிமுறைகளில் இரண்டாம் வழிமுறையை பின்பற்றி அனுப்ப வேண்டும். பிறகு உங்களின் அடையாள அட்டை அன்லாக் செய்யப்பட்டிருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil