என்னது ஆன்லைனில் ஆதார் கார்டை லாக் செய்ய முடியுமா? முழு விவரங்கள் இங்கே!

Aadhaar Biometrics Lock/Unlock : ஒருவருக்கு தன் ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால், அதனை லாக் (Lock) செய்யும் வாய்ப்பு

Aadhaar Card Online
Aadhaar Card Online

Aadhaar Card Online : மத்திய அரசு “ஆதார் அட்டைக்கென்று” தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் “Unique Identification Authority of India” ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தை நடத்தி வருகிறது இதன் மூலம் அனைவரும் இந்த சேவையத்திற்கு சென்று “ஆதார் அட்டையை” பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள திருத்ததை மேற்கொள்ளலாம். திருத்தம் மேற்கொள்ள ஆதார் சேவை மையம் வசூலிக்கும் கட்டணம் ரூபாய் 30 ஆகும்.

அனைத்து இடங்களிலும் ஆதார் முக்கியத்துவம் கட்டாயம் ஆகிவிட்ட இந்த நேரத்தில் நாம் அனைவருக்கும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் ஆதாரில் உள்ளது. அதில் ஒன்று தான் ஆதார் ஆன்லைன் லாக். ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தகவல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கே விளக்கி உள்ளோம்.

பயோமெட்ரிக் மூலம் உங்கள் ஆதார் அட்டையை உங்களால் ஆன்லைல் லாக் அல்லது அன் லாக் செய்ய முடியும். ஒருவருக்கு தன் ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால், அதனை லாக் (Lock) செய்யும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆதார் இணையதளம் மூலமாகவே எளிதாக ஆதாரை லாக் செய்துவிடலாம்.

ஆதார் எண்ணை லாக் செய்யும் வழிமுறை

1. முதலில் https://resident.uidai.gov.in/biometric-lock என்ற ஆதார் ஆணையத்தின் இணையப் பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

2. இப்பக்கத்தில் ஆதார் எண் மற்றும் திரையில் தெரியும் பாதுகாப்புக் குறியீட்டு எண் (Security Code) ஆகியவற்றை பதிவு செய்து Send OTP என்பதைக் கிளிக் வேண்டும். (ஆதார் மொபைல் ஆப் பயன்படுத்துபவர்கள் Enter TOTP என்பதைக் கிளிக் செய்யலாம்.)

3. சில மணித்துளிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வாயிலாக பாதுகாப்புக் குறியீட்டு எண் கிடைக்கும். அந்த எண்ணை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்துவிட்டு, Login என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

நோட் பண்ணிக்கோங்க! இனி மொபைல் இல்லாமல் கனரா வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்க முடியாது!

இதைச் செய்ததும் ஆதார் லாக் செய்யப்பட்டுவிடும். லாக் செய்யப்பட்ட ஆதார் எந்த இடத்திலும் பயன்படாது என்பது குறிப்பிடதக்கது. தேவையானபோது லாக் செய்த ஆதாரை ஆக்டிவேட் (Activate) செய்யவும் முடியும். அதற்கும் இதையே திரும்ப ஒருமுறை செய்ய வேண்டும்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aadhaar card online aadhaar card download aadhaar card address change aadhaar card update aadhaar card address changes

Next Story
ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்பவரா? உங்களை கண்காணிக்க அரசு உத்தரவு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com