aadhaar card pan card online : வங்கி மற்றும் மொபைல் எண் வாங்க ஆதார் எண் தேவையில்லை என்ற கூறிய உச்ச நீதிமன்றம், பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. எனவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை 2019 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம். ஏற்கனவே இந்த இணைப்புக்கு கடைசி காலகெடுவாக மார்ச் 31 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்பு, பல்வேறு காரணங்களால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 6 முறை நீட்டிக்கப்பட்டது. வருமானவரி தாக்கல்செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக உள்ளது. 2019 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்தால் போதும்.
இணையத்தின் மூலம் ஆன்லைனிலேயே சுலபமாக இணைக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் அட்டையின் தேவை அத்தியாவசமாகி உள்ளது.
எந்த ஒரு அடையாளச்சான்றிற்கும் ஆதார் இன்று முக்கியமாகி உள்ளது. இந்நிலையில் இந்திய அரசு ஏற்கனவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக்கொண்டது. அதற்காக ஏற்கனவே 5 முறை காலக்கெடுவினை அரசு அளித்தது. ஆனாலும், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு கடைசி கெடுவினை வைத்துள்ளது.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பேன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஒன்றாம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடியாகாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.னவே, வரும் அக்டோபர் 1ம் தேதி ஆதாருடன் இணைக்காத பான் எண்கள் காலாவதியாகி விடும். அதன்பின் புதிதாக விண்ணப்பித்தே பான் எண் பெற வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
aadhaar card pan card online :ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க,
//www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற முகவரிக்குச் செல்லவும். இதில் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை டைப் செய்து View Link Aadhaar Status என்பதை கிளிக் செய்து ஆதார் இணைப்பு செய்யப்பட்டுவிட்டதா என அறியலாம்.
இணைப்பது எப்படி?
1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.
2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.
4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.
5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.
உங்கள் பிஎஃப் பணத்தை பார்க்க நீங்கள் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை! மொபைல் போதும்
6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.