how to link moblie numbere with Aadhaar : இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாக திகழ்கிறது ஆதார் அடையாள அட்டை. ரேஷன் அட்டையில் மாற்றங்களை மேற்கொள்ள தேவையான மெனக்கெடல்கள் இதில் இல்லை என்பது தான் மிகவும் திருப்தி தரும் ஒன்று. பெயர், பாலினம், வயது, புகைப்படம், முகவரி, அலைபேசி எண் என அனைத்தையும் நம்மால் ஆதார் அட்டையில் மாற்றிக் கொள்ளும் வகையில் மிகவும் எளிமையான யூஸர் இண்டர்ஃபேஸ் தளமாக செயல்படுகிறது ஆதாரின் UIDAI தளம்.
நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை பெறும் போது கூறப்பட்ட தகவல்களை மாற்ற ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மாற்றங்களை பூர்த்தி செய்து அருகில் இருக்கும் ஆதார் சேவ கேந்திராவில் கொடுத்து மாற்றிக் கொள்ள இயலும்.
உங்களின் அலைபேசி எண்களை மாற்றுகின்றீர்களா? அதனை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டுமா? அப்போது முதலில் இதனை கவனியுங்கள்.
uidai தளத்தில் இருக்கும் ask.uidai.gov.in என்ற இணையத்திற்கு முதலில் செல்லவும்.
நீங்கள் ஏற்கனவே கொடுத்துள்ள அனைத்து அலைபேசி எண்ணை உள்ளீடாக கொடுத்து லாக் இன் செய்யவும்.
Online Aadhaar Services என்ற பகுதியில் மொபைல் போன் என்பதை தேர்வு செய்யவும்.
அங்கே கேட்கப்பட்டுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலை உள்ளீடாக செலுத்தி கேப்சாவையும் பதிவிடவும்.
அதனை சேமித்து மேற்கொண்டு ப்ரோசீட் கொடுத்து உங்களின் போனை நம்பரை அப்டேட் செய்து கொள்ளலாம். அப்டேட் செய்யப்பட்ட புதிய எண்ணிற்கு ஓ.டி.பி. வருவதன் மூலம் நீங்கள் இதனை உறுதி செய்து கொள்ள இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil