கசங்காது; மழையில் நனையாது… ஆதார் பி.வி.சி கார்டு வாங்கிட்டீங்களா?

ஆதார் பி.வி.சி. அட்டையை ஒருவர் வெறும் 50 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதற்கான வரி மற்றும் அஞ்சல் பணம் அனைத்தும் ரூ. 50-ல் அடங்கும்.

Aadhaar card

Aadhaar PVC Card available online : ஆதார் அட்டை அனைத்து முக்கிய விவகாரங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, பான் அட்டை, யு,ஏ.என் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சேர்ப்பது கட்டாயம் ஆகும். அதன் மூலம் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற இயலும். ஆனால் தற்போது கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு சென்றால் கிழிந்து விடுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. அதனால் தான் ஏ.டி.எம். அட்டை போன்ற தரத்தில் தற்போது ஆதார் பி.வி.சி. அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனைப் பெறுவது எப்படி? விளக்கம் இங்கே

ஒருவர் தன்னுடைய ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணை பயன்பத்தி பி.வி.சி. அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.

uidai.gov.in அல்லது resident.uidai.gov.in என்ற தளத்திற்கு சென்று ஆதார் அடையாள எண், விர்ச்சுவல் அடையாள எண் ஆகியவற்றை உள்ளீடாக செலுத்தி நீங்கள் பி.வி.சி. அட்டையை பெற்றுக் கொள்ள இயலும்.

ஆதார் பி.வி.சி. அட்டையை ஒருவர் வெறும் 50 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதற்கான வரி மற்றும் அஞ்சல் பணம் அனைத்தும் ரூ. 50-ல் அடங்கும்.

uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற இணையத்திற்கு முதலில் செல்லவும்

ஆர்டர் ஆதார் பி.வி.சி. கார்ட் என்ற பகுதிக்கு செல்லவும்

உங்களின் 12 இலக்க ஆதார் அடையாள எண் அல்லது 16 இலக்க விர்ச்சுவல் ஐடியை உள்ளீடாக செலுத்தவும்

அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு கோடினை உள்ளீடாக செல்த்தவும்

ஒரு வேளை உங்களின் தொலைபேசி எண் உங்களின் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால் அதற்கான இடத்தில் டிக் செய்யவும். ஆதாருடன் இணைக்கப்படாத தொலைபேசி எண்ணை உள்ளீடாக தரவும்

உங்களின் போனுக்கு ஒ.டி.பி. வரும். அதனை உள்ளீடாக கொடுத்து சம்மிட் செய்யவும்.

ப்ரிவியு செய்த பிறகு இந்த அடையாள அட்டைக்கான பேமெண்ட்டை செலுத்தவும். நெட்பேங்கிங், க்ரெடிட் அட்டை மற்றும் டெபிட் அட்டை ஆகியவை மூலம் ரூ. 50- ஐ செலுத்த முடியும்.

பணம் செல்த்திய பிறகு பேமெண்ட் ஸ்லிப்பை டவுன்லோடு செய்து கொள்ளவும். உங்களின் ஆதார் பிவிசி அட்டை ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டு விடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aadhaar pvc card available online for rs 50 know how to apply

Next Story
Post Office Scheme: 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் ரிட்டன்… இந்த ஸ்கீமை பார்த்தீங்களா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com