aadhar card download online : ஆதார் கார்டு தவிர மற்ற எதை வாங்க வேண்டுமென்றாலும் அதற்கு ஆதார் தேவை என்றாகிவிட்டது. ஆம்புலன்ஸ் தொடங்கி அத்தனை அத்தியாவச தேவைகளுக்கும் ஆதார் எண் தேவை. அப்படியென்றால், ஆதார் கார்டு எப்போது நமக்குத் தேவைப்படும் என்பதை சொல்லவே முடியாது. எந்த நேரமும் கையில் இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் தொலைந்துப் போனால்?
லைசென்ஸ், பாஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது டூப்ளிகேட் ஆதார் கார்டு வாங்குவது எளிமையான ஒன்று என்பதுதான் இதில் ஒரே ஆறுதலான விஷயம்.இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய இனையதளத்தில் வசதி அளித்துள்ளது.
ஒருவரது ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய அவர் ஆதார் இணையதளம் மூலம் எளிதாக அறிந்துக்கொள்ளலாம். எப்போ, எங்கு உங்கள் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தகவல்கள் எளிதாக பெறலாம்.உங்கள் ஆதார் எண் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள //resident.uidai.gov.in/notification-aadhaar iN இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளவும்.
aadhar card download online : எப்படி தெரியுமா?
மொபைல் ஆதாரை டவுன்லோட் செய்துக் கொள்ள தேவையான ஆவணங்கள் : பதிவு ஐடி / ஆதார் எண் 2. ஏற்றுகொள்ளல் ரசீதில் (acknowledgement slip) உள்ள படி 3. முழுப் பெயர் 4. அஞ்சல் குறியீடு எண் 5. பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்.
செயல்முறை:
1. ஆதாரின் இந்த இணைய முகவரிக்கு செல்லுங்கள் //resident.uidai.gov.in/find-uid-eid
2. அதில் உங்களின் பெயர், நீங்கள் முறையாக பதிவு செய்த இ-மெயில் ஐ.டி. அல்லது போன் நம்பரை உள்ளீடாக தர வேண்டும்
3. ஓ.டி.பி பட்டனை க்ளிக் செய்யவும்
4. உங்களின் மின்னஞ்சல் அல்லது போன் நம்பருக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் அனுப்பப்படும்.
5. அதனை நீங்கள் வெரிஃபை செய்தவுடன் உங்களின் போனுக்கு ஆதார் எண் அனுப்பப்படும்.
6.UIDAI இணையத்தில் இருக்கும் ஈ ஆதார் (e-Aadhaar) பக்கத்திற்கு செல்லவும்
7. அதில் ஐ ஹேவ் ஆதார் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்
8. அதில் உங்களின் ஆதார் எண்ட்ரொல்மெண்ட் எண், முழுப்பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடாக தர வேண்டும் .
9. பின்னர் ஓ.டி.பி ப்ராசஸ் முடிவுற்றவுடன் உங்களின் ஆதாரை டவுன்லோட் செய்தவற்கான டவுன்லோட் ஆதார் என்ற ஆப்சன் வரும். அதை க்ளிக் செய்து ஆதாரைப் பெற்றிடவும்.