ஆதார் அட்டை இப்போது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாத ஆவணமாக மாறிவிட்டது.வங்கிக் கணக்கைத் தொடங்க, ஓட்டுநர் உரிமத்தைப் பெற மற்றும் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்ற பெரும்பாலான சேவைகளைப் பெற ஆதார் அட்டைப் பயன்படுகிறது.
சமீப காலமாக போலி ஆதார் கார்டுகளை மோசடி சம்பவங்களுக்கு உபயோகிப்பது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் போலியான ஆதார் கார்டு அல்லது நம்பர்களை பயன்படுத்துகின்றனர். எனவே, அதனை தடுப்பதற்காக, UIDAI முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
12 டிஜிட் ஆதார் எண்ணுடன், உங்களது செல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை செக் செய்திட UIDAI அறிவுறுத்தியுள்ளது. ஆதார் கார்டுடன் தனிப்பட்ட மொபைல் எண் லிங்க செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சில ஸ்டெப்ஸ்களை மத்திய நிதியுதவி அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து UIDAI வெளியிட்ட ட்வீட்டில், ஆதார் கார்டுடன் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பரை இணைத்திருக்க வேண்டும். ஒருவேளை அதில் சந்தேகம் இருந்தால், தனிப்பட்ட மொபைல் நம்பர் இருக்கிறதா என்பதை இந்த லிங்கில் செக் செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு மொபைல் நம்பர் செக் செய்யும் வழிமுறை
- முதலில் Log in to myaadhaar.uidai.gov.in/verify-email-mobile செல்ல வேண்டும்.
- அதில், 'Verify Mobile Number' and 'Verify Email Address' என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படும். உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்ய வேண்டும்
- அடுத்து, ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்
- தொடர்ந்து, மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடியை பதிவிட வேண்டும். (Based on Step B)
- இதையடுத்து, Captcha-வை டைப் செய்யுங்கள். அடுத்து, 'Send OTP'ஆப்ஷன் கொடுங்கள்.
இப்போது, ஓடிபி எண் உங்கள் நம்பருக்கு வரும் பட்சத்தில், ஆதாருடன் மொபைல் நம்பர் சரியாக லிங்க் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிந்திட முடியும். அதே நடைமுறை தான், மெயில் மூலம் இமெயில் ஐடியை செக் செய்திட முடியும்.
ஆதார் மோசடியில் இருந்து தப்பிக்க இந்த 5 ஸ்டெப்ஸ்களை ஃபாலோ செய்யுங்கள் என UIDAI தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil