ஆதார் எண்ணை பான் கார்டில் இணைப்பது மிகவும் எளிது ; இணைக்கும் வழிமுறை…

How to Link Aadhaar with PAN Card Online: பான் கார்டில் உள்ள விவரங்கள் பொருந்தவில்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை.

By: Updated: July 28, 2019, 05:39:10 PM

aadhar pan link online registration : வருமான வரி ரிட்டர்ன் ஃபைல் செய்வோர் இந்த மாதத்துடன் தங்களது பேன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் உத்தரவின்படி வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஆதார் அட்டையை பேன் கார்டுடன் இணைப்பது கட்டாயமாகும்.

இணையதளம், எஸ்எம்எஸ், ஐடிஆர் மற்றும் பேன் விண்ணப்பம என நான்கு வழிகளில் செய்யலாம். ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற முகவரிக்குச் செல்லவும். இதில் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை டைப் செய்து View Link Aadhaar Status என்பதை கிளிக் செய்து ஆதார் இணைப்பு செய்யப்பட்டுவிட்டதா என அறியலாம்.

How to Link PAN Card with Aadhaar Online: இணைப்பது எப்படி?

ஐடிஆர்: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போதே, ஆதார் அட்டை மற்றும் பேன் கார்ட்டை இணையத்தில் இணைத்துக்கொள்ளலாம். இதற்கான லிங்க்குகள் tin-nsdl.com மற்றும் utiitsl.com.

எஸ்எம்எஸ்: 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <12-digit Aadhaar> <10-digit PAN> என அனுப்பவேண்டும்.

இணையதளம்: incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்த இதனை செய்யலாம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில் “link Aadhaar” என்பதை கிளிக் செய்து இதனை செய்யலாம்.

பெயர் மாற்றம் முதல் வீட்டு முகவரி மாற்றம் வரை.. ஆதாரில் திருத்தம் செய்ய உங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் இதுதான்!

பேன் கார்ட்டு விண்ணப்பம்:

புதிதாக பேன் கார்ட் விண்ணப்பிபவர்கள், அப்போது ஆதார் எண் கொடுத்து இணைத்துக் கொள்ளலாம்.

ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள விவரங்கள் பொருந்தவில்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. உதாரணமாக பெயர் இரண்டிலும் ஒரே போல இல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எனப்படும் ரகசிய பாஸ்வேட் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதை பூர்த்தி செய்யலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Aadhar pan link online registration aadhaar pan linking aadhaar pan linking online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X