ஆதார் அட்டையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வங்கிக் கணக்கு, பான் அட்டை போன்வற்றில் ஆதார் எண்ணை சேர்ப்பது கட்டாயமாகிவிட்டது. அனைத்து அரசு வேலைகளுக்கும் தற்போது ஆதார் அட்டை அவசியம். ஆதார் அட்டையை நேரடியாக UIDAI தளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UIDAI-இன் சமீபத்திய அறிவிப்பின்படி, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மொபைல் நம்பரை பயன்படுத்தி ஆதார் கார்டை ஆர்டர் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், " ஆதாரை பிவிசி கார்டை UIDAI தளத்தில் ஆர்டர் செய்திட, பதிவு செய்த மொபைல் எண் தேவையில்லை. எந்தவொரு மொபைல் எண்ணை பயன்படுத்தி, ஓடிபி வெரிபிகேஷன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஒரு ஆதார் கார்ட் ஆர்டர் செய்திட 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிவிசி ஆதார் கார்டுக்கான சேவையை சமீபத்தில் UIDAI தொடங்கியது. சாதாரண அட்டையை காட்டிலும், பிவிசி கார்ட் மிகவும் பாதுகாப்பானது ஆகும். மழையில் நனையாது, கிழிக்கவும் முடியாது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
பிவிசி ஆதார் கார்டு டவுன்லோடு செய்யும் வழிமுறை
- முதலில் UIDAI வலைத்தளமான uidai.gov.in அல்லது resident.uidai.gov.in என்ற வலைத்தளத்தில் அதை செய்யலாம்.
- அதில் get aadhaar என்ற ஆப்சனில், oarder aadhaar PVC card என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில், Order Aadhar Pvc card கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், 12 டிஜிட் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
- தொடர்ந்து, Captcha verification செய்ய வேண்டும்.
- அடுத்ததாக, பதிவு செய்த மொபைல் எண் இருந்தால் Send Otp கொடுக்கலாம். இல்லையெனில், my mobile number is not registered என்ற பாக்ஸினை கிளிக் செய்து, கையில் வைத்திருக்கும் மொபைலின் நம்பரை பதிவிட வேண்டும்.
- உங்களது மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஓடிபினை கொடுத்து டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்சை கிளிக் செய்துவிட்டு, சம்பிட் ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.
- இறுதியாக, Make Payment ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் பணம் செலுத்துவதற்கான தளத்திற்கு மாற்றப்படுவீர்கள்.
- அதில் கார்டு (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம், அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ, யுபிஐ ஐடி மூலமாகவோ பணம் செலுத்திக் கொள்ளலாம்.
- பேமெண்ட் கன்பார்ம் ஆனதும், உங்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் ரசீது வரும். அதனையும் டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளவும். மேலும், மொபைலுக்கு மெசேஜில் உங்கள் Service Request Number-வும் வரும். அதனை உபயோகித்து, உங்களது ஆர்டர் ஸ்டேட்ஸை செக் செய்துகொள்ளலாம்.
நீங்கள் அப்ளை செய்த 7 நாட்களில் உங்கள் வீட்டிற்கே வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil