/tamil-ie/media/media_files/uploads/2017/06/Actress-Tamanna-Latest-Photo-Stills-2.jpg)
நடிகை தமன்னா மும்பையில் சொத்து வாங்கியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Tamannah-Lust-Stories.jpg)
மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் மொத்தம் 2,197 சதுர அடி பரப்பளவில் நடிகை தமன்னா இடம் ஒன்றை வாங்கியுள்ளார். ரூ.24 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், அந்தேரி மேற்கில் உள்ள பாரத் அல்டாவிஸ்டா கோபுரத்தின் தரை மற்றும் முதல் தளங்களில் தலா ஒரு யூனிட், இரண்டு பார்க்கிங் ஸ்லாட்டுகள் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/Tn6djkb9M4bYFShY34bA.jpg)
முதலீட்டு நோக்கத்திற்காக நடிகை சொத்தை வாங்கியுள்ளார் என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவித்தன. தரை தளத்தின் இடம் 900 சதுர அடி பரப்பளவை உள்ளடக்கியது. அதே நேரத்தில் முதல் தளம் 1,297 சதுர அடி உள்ளது என ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/Tamannaah-Bhatia.jpg)
நடிகை தமன்னா ஜூன் 27, 2024 அன்று இரண்டு கூடுதல் ஒப்பந்தங்களைப் பதிவு செய்தார். மும்பையின் பிரைம் ஜூஹு பகுதியில் மாதம் ₹18 லட்சத்துக்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட 6,065 சதுர அடி வணிகச் சொத்தும், அந்தேரி வெஸ்டில் உள்ள மூன்று குடியிருப்புப் பகுதிகளும் ₹7.84 கோடிக்கு இந்தியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/utLQgkS1w4prFw2hQIOw.jpg)
கடந்த மாதம், மும்பையின் போரிவலி புறநகரில் மகன் அபிஷேக் பச்சன், ரூ.15.42 கோடிக்கு ஆறு குடியிருப்புகளை வாங்கியதைத் தொடர்ந்து, தந்தை அமிதாப் பச்சன், மும்பையின் போரிவலி புறநகரில், கிட்டத்தட்ட ₹7 கோடி மதிப்புள்ள இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கினார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/surya-jothika.jpg)
மராட்டிய மாநிலம் மும்பையில் வீடு வாங்க பாலிவுட் பிரபலங்கள் பலரும் விரும்புகின்றனர். தமிழ் நடிகர் சூர்யா முதல் இந்தி நடிகர் ஷாருக், அமிதாப், நடிகைகள் சாரா அலிகான் என பலரும் மும்பையில் வீடுகள் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.