Advertisment

அதானி எண்டர்பிரைசஸ் வருவாய் 42 சதவீதம் உயர்வு.. நிகர லாபம் ரூ.820 கோடி

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருவாய் 820 கோடி உயர்ந்துள்ளது. நிகர லாபம் ரூ.520 கோடியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Adani Enterprises Shares jump 9 after net profit surges to Rs 820 crore

அதானி நிறுவனம், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான சில நாட்களில் சந்தை மூலதனத்தில் ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் இழந்தது .

செவ்வாய்க்கிழமையன்று அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 9% உயர்ந்து ரூ.1862.40 ஆக இருந்தது, முன்னதாக அதானி எண்டர்பிரைசஸ்ஸின் மூன்றாம் காலாண்டு அறிக்கை முடிவுகள் வெளியாகின.
கௌதம் அதானி தலைமையிலான நிறுவனம், முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 12 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ. 820 கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisment

அதன்படி, நிறுவனத்தின் மொத்த வருமானம் 42% அதிகரித்து ரூ.26,951 கோடியாகவும், EBIDTA 101% அதிகரித்து ரூ.1,968 கோடியாகவும் உள்ளது.
அதானி குழுமம்/குடும்பம் பங்குக் கையாளுதல் மற்றும் பணமோசடி செய்ததாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட குறுகிய விற்பனையாளர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து தற்போது அதனி பங்குகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன.

ஹிண்டன்பர்க்கின் அறிக்கைக்குப் பிறகு நிறுவனத்தின் பங்குகள் 50% சரிந்து, அறிக்கை வெளியான சில நாட்களில் சந்தை மூலதனத்தில் ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் இழந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment