Advertisment

Hindenburg Research : அதானி பங்குகள் ரூ.2 லட்சம் கோடி இழப்பு

அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் அறிக்கை வௌயான நிலையில், அதானி பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. வெள்ளிக்கிழமை (ஜன.27) காலை சந்தையில் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பை கண்டன.

author-image
WebDesk
New Update
Nifty settles below 18800 Sensex tanks 200 pts

இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானி

இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட ஒன்பது அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகின.

ஆரம்ப வர்த்தக நேரத்தில் குழுமம் கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை இழந்தது. செவ்வாயன்று முடிவடைந்ததில் இருந்து அதன் சந்தை மூலதனத்தில் ஒட்டுமொத்த சரிவு ரூ.2.75 லட்சம் கோடியாக இருந்தது.

Advertisment

அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 17 சதவீதம் கடுமையாக சரிந்தன. அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 12 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன. குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 3.5 சதவீதம் சரிந்தது.

இந்த நிலையில் அதானி தரப்பில் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி அறிக்கை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதானி குழுமத்தின் சட்டத்துக்கு புறம்பான வெட்கக்கேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டம் பல ஆண்டுகளாக நடத்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்கிடையில், ஹிண்டன்பெர்க் ரிசர்ச், அதன் அறிக்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும், அதற்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் "தகுதியற்றது" என்று கூறியுள்ளது.

மேலும், “எங்கள் அறிக்கையின் முடிவில், 88 நேரடியான கேள்விகளை நாங்கள் கேட்டோம். இதுவரை, அதானி இந்தக் கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை,” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment