இந்திய பணக்காரர் கௌதம் அதானியின் குழுமம், புது டெல்லி டெலிவிஷன் லிமிடெட் (என்டிடிவி) நிறுவனர்களின் பங்குகளை கைப்பற்றியது. அதாவது, என்டிடிவி, நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் NDTV இல் உள்ள தங்கள் பங்குகளில் 27.26 சதவீதத்தை அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள RRPR ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்றனர்.
ஒரு பங்குக்கு ரூ. 342.65 ($4.1426) வீதம் விற்கப்பட்ட உள்ளது. மேலும், வெளியேறும் அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரே விலையில் கொடுக்கப்பட வேண்டும் என்று கையகப்படுத்துதல் விதிமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்ட போதிலும், அதானி-ராய் பங்கு பரிமாற்றம் கையகப்படுத்தும் விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு NDTV யில் அதானியின் நுழைவு மறைமுகமாக இருந்தது. இது பொதுவான பங்குதாரர்களுக்கு நியாயமற்றது என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டாளரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.
இதற்கிடையில் மும்பை பங்குச் சந்தையில், என்டிடிவியின் பங்குகள் 5.8 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், இந்த ஆண்டு எழுச்சியை 203 சதவீதமாக உயர்த்தியது.
முன்னதாக, அதானி தி பைனான்சியல் டைம்ஸுக்கு நவம்பர் மாதம் அளித்த பேட்டியில், NDTVயை உலகளாவிய ஊடக அதிகார மையமாக மாற்ற விரும்புவதாக கூறினார்.
இந்த வாரம் உள்ளூர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், NDTV தலையங்க ரீதியாக சுதந்திரமாக இருக்கும் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/