Advertisment

கிழியாது; நனையாது.. உங்க முழுக் குடும்பத்திற்கும் பி.வி.சி ஆதார் கார்டு.. இப்படி வாங்கிக்கோங்க!

பி.வி.சி கார்டு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கிழியாது; நனையாது.. உங்க முழுக் குடும்பத்திற்கும் பி.வி.சி ஆதார் கார்டு.. இப்படி வாங்கிக்கோங்க!

ஒரே செல்போன் நம்பரை பயன்படுத்தி முழுக் குடும்பத்துக்கும் பி.வி.சி கார்டை குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஆர்டர் செய்து கொள்ளும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த அட்டையை அச்சிட குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

கிழியாத, நனையாத இந்த அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது குறித்து யுஐடிஏஐ இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

பி.வி.சி கார்டு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருக்கும். இந்த கார்டில் டிஜிட்டல் கையொப்பத்துடன் கியூஆர் குறியீடு இருக்கும். அத்துடன் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புகைப்படம் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும் என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 பீரிமியம் செலுத்தினாலே, ரூ.1 கோடி வரை நன்மைகள்; எல்ஐசி-ன் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

ட்விட்டரில் யுஐடிஏஐ வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

உங்கள் ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைதான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது. அங்கீகாரத்திற்காக OTP பெற எந்த மொபைல் எண்ணையும் நீங்கள் பயன்படுத்தலாம். எனவே,ஒருவர் முழு குடும்பத்திற்கும் ஆதார் பி.வி.சி கார்டுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் ஒரு ஆதார் பிவிசி கார்டுக்கு ஜிஎஸ்டி மற்றும் ஸ்பீடு போஸ்ட் கட்டணங்கள் உட்பட ரூ. 50 செலுத்த வேண்டும்.

இந்த கார்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்: பாதுகாப்பான QR குறியீடு, ஹாலோகிராம், சிறிய எழுத்துக்கள், கோஸ்ட் இமேஜ், வெளியீட்டு தேதி & அச்சு தேதி, Guilloche பேட்டர்ன், ஆதார் லோகோ ஆகியவை இருக்கும் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத அல்லது மாற்று மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்வது எப்படி என்பதை படிப்படியாகப் பார்க்கலாம்.

படி 1: https://uidai.gov.in அல்லது https://resident.uidai.gov.in ஐப் பார்வையிடவும்

படி 2: 'எனது ஆதார் டேப்' என்பதன் கீழ், "ஆர்டர் ஆதார் கார்டு" சேவையைக் கிளிக் செய்யவும்

படி 3: உங்களின் 12 இலக்க ஆதார் எண் (UID) அல்லது 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் (VID) அல்லது 28 இலக்க பதிவு ஐடியை உள்ளிடவும்

படி 4: கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்

படி 5: உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையென்றால், "எனது மொபைல் என் .." என்ற பெட்டியில் சரிபார்க்கவும்.

படி 6: பதிவு செய்யப்படாத அல்லது மாற்று மொபைல் எண்ணை உள்ளிடவும்.

படி 7: "OTP அனுப்பு" என்பதைக்   கிளிக் செய்யவும்

படி 8: “விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்”செக்பாக்ஸை கிளிக் செய்யவும்

படி 9: "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்யவும்

படி 10: "பணம் செலுத்து" என்பதைக் கிளிக் செய்யவும்.

இதன் பிறகு நீங்கள் கட்டண நுழைவாயில் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். வெற்றிகரமாக கட்டணம் செலுத்தி முடித்த பிறகு, டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய ரசீது உருவாக்கப்படும், அதை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம். சேவை கோரிக்கை எண் SMS மூலம் அனுப்பப்படும்.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யூபிஐ, பேடிஎம் ஆகியவற்றின் மூலம் பணம் நீங்கள் செலுத்த முடியும்.

UIDAI இணையதளத்தில் உள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின்படி, விண்ணப்பித்த தேதியை சேர்க்காமல் ஒருவரிடமிருந்து ஆதார் பி.வி.சி கார்டுக்கான ஆர்டரைப் பெற்ற 5 வேலை நாட்களுக்குள் அஞ்சல் துறைக்கு அச்சிடப்பட்ட ஆதார் அட்டைகளை யுஐடிஏஐ ஒப்படைக்கிறது.  பிறகு தபால் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Business Update Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment