Share Market | மதுரா ஃபேஷன் & லைஃப்ஸ்டைல் வணிகத்தை பட்டியலிடப்பட்ட நிறுவனமாக பிரிப்பதற்கான திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து, ஆதித்யா பிர்லா ஃபேஷன் பங்குகள் 15% அப்பர் சர்க்யூட்டில் இன்று (ஏப்.2) நிலைநிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், ஆதித்யா பிர்லா ஃபேஷன் பங்கின் விலை பிஎஸ்இயில் அதிகபட்சமாக ரூ.243.45 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஆதித்யா பிர்லா ஃபேஷன் பங்குகள் ஒரு வார சராசரி 30 லட்சம் பங்குகளில் இருந்து இன்று மொத்தம் 3 கோடி பங்குகள் கை மாறியதால் அதிக அளவுகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
தேவையான ஒப்புதல்களுக்குப் பிறகு, பிரித்தல் ஒரு NCLT திட்டத்தின் ஏற்பாட்டின் மூலம் செயல்படுத்தப்படும், மேலும் ABFRL இன் அனைத்து பங்குதாரர்களும் புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனத்தில் ஒரே மாதிரியான பங்குகளை வைத்திருப்பார்கள்.
இது குறித்து, ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் லிமிடெட்டின் MD ஆஷிஷ் தீக்ஷித் கூறுகையில், “தனிப்பட்ட வணிகப் பிரிவோடு இணைந்த வேறுபட்ட மூலோபாயத்தில் கூர்மையாக கவனம் செலுத்துவதற்கு மறுசீரமைப்பு உதவும். இந்த வணிகங்கள் ஒவ்வொன்றும் எப்போதும் அந்தந்த தலைமை நிர்வாக அதிகாரிகளின் கீழ் தன்னாட்சி முறையில் இயங்குகின்றன” என்றார்.
மேலும், “எளிமைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு வணிகங்களை நீடித்த வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றிற்கு சிறப்பாக நிலைநிறுத்துகிறது” என்றார்.
மதுரா ஃபேஷன் & லைஃப்ஸ்டைல் வணிகப் பிரிவு (MFL) நான்கு ஃலைப்ஸ்டைல் ப்ராண்டுகளை கொண்டுள்ளது. ஆதித்யா பிர்லா பங்குகள் இந்த ஆண்டு இதுவரை 6%க்கும் மேல் உயர்ந்துள்ளது, அதே சமயம் பங்கு ஒரு வருடத்தில் 11%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை (ஏப்.02,2024), காலை 10 மணியளவில், மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) ஆதித்யா பிர்லா ஃபேஷன் பங்குகள் 13.37% உயர்ந்து ₹240.00க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“