பொதுவாக ஒரு முதலீட்டாளர், வலிமையான நிதி இலக்குகளை உருவாக்க நான்கு நிலையை உருவாக்க வேண்டும்.
மேலும், சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் பணவீக்கம் மற்றும் கூட்டுப் பலன்களிலிருந்து ஏற்படும் அபாயங்களைக் குறைக்க உங்கள் முதலீடுகளை பரவலாக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
1) அவசரகால நிதி
முதலில் உங்களது முதல் சேமிப்பு திட்டத்தில் அவசர தேவையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆகவே, ஆறு முதல் 12 மாத வீட்டுச் செலவுகளுக்கு சமமான அவசர நிதியை உருவாக்குவது சிறந்தது.
அவசர நிதியின் ஒரு பகுதியை உயர் கிரெடிட் தரக் கடன் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். இது மூன்று ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் வங்கி வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது வரிச் செயல்திறனுடையது.
வங்கி மற்றும் தபால் நிலைய ஃபிக்ஸட் டெபாசிட்களையும் தேர்ந்தெடுக்கலாம். இதில் தேவையின்போது, பணத்தை உடனடியாக எடுக்க முடியும். இந்தக் கருவிகளின் வருமானம் குறைவாக இருந்தாலும், பணப்புழக்கத் தேவைகள் மற்றும் உடனடிப் பணத் தேவைகளுக்கு இது உதவும்.
2) குறுகிய கால முதலீடுகள்
இரண்டாவதாக குறுகிய கால நிதி தேவைகளை கவனிக்க வேண்டும். நிலையான வருமானம், குறுகிய காலக் கடன் மற்றும் டைனமிக் பாண்ட் ஃபண்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சொத்துக்களில் 2 முதல் 3 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.
3) நடுத்தர கால முதலீடுகள்
இந்த முதலீடுகள் ஐந்து வருடங்களுக்கும் குறைவாக இருக்கும் என்பதால், லாபத்தில் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையான வருவாயை வழங்கக்கூடிய பெரிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
ஹைப்ரிட் ஃபண்டுகளான மல்டி-அசெட் ஃபண்டுகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம்
4) நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
இந்த முதலீடு செல்வத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் முதலீடுகள், தரமான நிறுவனங்களின் பங்குகள் மற்றும் ஓய்வூதிய கார்பஸை உருவாக்க முயல வேண்டும்.
பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்புகளில் முதலீடு செய்யலாம்.
நீண்ட காலத்திற்கு ஏற்ற இறக்கத்தை முறியடிக்க மல்டி கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/