Monthly Income Scheme Account: தற்போது நாம் மாதாந்திர வருமானம் கிடைக்கும் அஞ்சல சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளில் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகும்.
பல சிறு சேமிப்புத் திட்டங்கள் தபால் அலுவலகத்தால் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு திட்டத்தின் பெயர் மாதாந்திர வருமானத் திட்டம், இது MIS கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
பெயருக்கு ஏற்ப, மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கில் மொத்தத் தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஒரு நிலையான தொகையை வட்டியாகப் பெறலாம்.
இத்திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில், முதிர்ச்சியின் போது அசல் தொகையும் திருப்பித் தரப்படும். மார்ச் 31 அன்று, நிதி அமைச்சகம் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியது. இப்போது MIS திட்டத்தில் 7.4 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு 7.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை
போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்யும் நேரத்தில் வட்டி விகிதம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பொருந்தும்.
ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் திருத்தப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலும், அது முதலீட்டாளருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ் கால்குலேட்டர் படி, ஒரு முதலீட்டாளர் இந்தத் திட்டத்தில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், அவருக்கு ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.3083 கிடைக்கும்.
இந்தத் தொகை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் பெறப்படும். இந்த ஐந்து ஆண்டுகளில், கணக்கு வைத்திருப்பவருக்கு வட்டியில் இருந்து மட்டும் மொத்தம் ரூ.184980 கிடைக்கும். ஐந்தாண்டுகள் முடிந்த பிறகு ரூ.5 லட்சம் திருப்பித் தரப்படும்.
பட்ஜெட் 2023 இல் அஞ்சல் அலுவலக எம்ஐஎஸ் திட்டத்தில் மற்றொரு மாற்றம் செய்யப்பட்டது, இது நிதி மசோதா 2023 இல் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த விதி ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. அஞ்சல் அலுவலக எம்ஐஎஸ் திட்டத்தில் தனிநபர் ஒருவர் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முன்னதாக இந்த வரம்பு ரூ.4.5 லட்சமாக இருந்தது. கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான இந்த வரம்பு இப்போது ரூ.15 லட்சமாக உள்ளது. முன்னதாக இதன் வரம்பு ரூ.9 லட்சமாக இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“