ஆடி அடங்கிய ஆட்டம் ; தள்ளாட்டத்தில் இந்திய பங்குசந்தை

சர்வதேச சந்தைகளைப் பார்க்கையில் ஆசிய, ஜப்பான், ஆஸ்திரேலிய சந்தைகள் சரிவில் இருந்தன. அமெரிக்க சந்தை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.சந்திரன்

இந்திய பங்குசந்தை இன்று காலை வணிகம் தொடங்கியது முதலே, நிலையற்ற போக்கை பிரதிபலித்தது. ஏறுவதும், இறங்குவதும் எனத் தொடர்ந்த சந்தை வணிகம் முடிந்த நேரத்தில் முந்தைய வணிக தினத்தை விட குறைந்த அளவிலேயே ஓய்வு பெற்றது. இதனால், மும்பை சந்தையின் சென்செக்ஸ் 71 புள்ளிகளை இழந்து 33,704 என்ற அளவிலும், தேசிய சந்தையின் நிப்டி 18 புள்ளிகளை மட்டும் இழந்து 10,360 என்ற நிலையிலும் தனது வணிகத்தை முடித்தன.

பிஎன்பி வங்கி மோசடியை அடுத்து கான்பூரிலும் பொதுத்துறை வங்கிகளில் கடன்பெற்ற ரோட்டோமேக் தொழிலதிபரை காணவில்லை என்ற செய்தி பரவியபோது வீழ்ச்சியடைந்த பல பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் இன்று சற்றே சமாளித்து எழுந்தன. மறுபுறம் உலோகத்துறை பங்குகளிலும் பரவலான ஏற்றத்தைக் காண முடிந்தது. சர்வதேச சந்தைகளைப் பார்க்கையில் ஆசிய, ஜப்பான், ஆஸ்திரேலிய சந்தைகள் சரிவில் இருந்தன. அமெரிக்க சந்தை விடுமுறையில் உள்ளது. ஐடி நிறுவனங்களின் எதிர்காலம் பற்றி நாஸ்காம் என குறிப்பிடப்படும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் சார்பான கூட்டமைப்பு வெளியிட்ட சாதக கணிப்புகளால், அந்த துறை பங்குகளிலும் ஏற்றம் தெரிந்தன.

×Close
×Close