scorecardresearch

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அதிகரித்த கிரெடிட் கார்டு பயன்பாடு: கோடிகளில் பண பரிவர்த்தனை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அதிகரித்த கிரெடிட் கார்டு பயன்பாடு: கோடிகளில் பண பரிவர்த்தனை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு டெபிட் கார்டுகளை  விட கிரெடிட் கார்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிசர்வ் வங்கியின் தகவல் படி, கிரெடிட் கார்டு பயன்பாட்டின் மூலம் நடைபெற்ற பணப் பரிவர்த்தனை ரூ. 6,30,414 கோடியிலிருந்து, ரூ. 10,49,065 கோடிகளாக அதிகரித்துள்ளது (2020 முதல் 2021 வரை) . இதே நேரத்தில் டெபிட் கார்டு மூலம் நடைபெற்ற பண பரிவர்த்தனை ரூ. 6,61,385 கோடியிலிருந்து ரூ. 5,61,450  கோடியாக குறைந்துள்ளது.

இதுபோல 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022 டிம்சம்பர் மாதம் வரை கிரெடிட் கார்டு பயன்பாடு92% அதிகரித்துள்ளது. இதுபோல் 2020 டிசம்பரில் ரூ  63,487  கோடியாக டெபிட்கார்ட் பயன்பாடு இருந்தது. 2021 டிசம்பரில் ரூ. 93,907 கோடியாக இருந்தது..

டிசம்பர் 2019ம் ஆண்டு டெபிட் கார்ட் மூலம் செய்யப்பட்ட பண பரிவர்தனை ரு. 83,953 கோடியாக இருந்தது.  இது 2022 டிசம்பர் மாதம் ரூ. 58,625 ஆக குறைந்துள்ளது. இது 30% குறைவாகும்.

கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிக்க, கொரோனா ஊரடங்குகிற்கு பிறகு பணத்தை அதிகமாக செலவு செய்யும் குணம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் டெபிட் கார்டு பயன்படுத்தி ஏ.டி.எம்-ல் பணத்தை எடுப்பதையே மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

2022 டிசம்பர் மாதத்தில் டெபிட் கார்டு பயன்படுத்தி ஏ.டி.எம் மூலம் ரூ. 2,78,923 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரெடிட் கார்டு பயன்படுத்து ஏ.டி.எம் மூலம் வெறும் ரூ.  392  கோடி மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

”தனியார் வங்கிகளில், மக்கள் பயன்படுத்தி வந்த சேமிப்பு அக்கவுண்டில் இருக்கும் தொகை குறைந்துள்ளது. குறிப்பிட்ட தொகையை நாம் வங்கி கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்பதாலும், டெபிட் கார்டு பயன்பாடு குறைந்துள்ளது. அப்படி இருக்கும் சூழலில் அனைவரும் கிரெட் கார்டை தான் தேர்வு செய்வார்கள்” என்று தனியார் வங்கியின் மூத்த அதிகாரி கூறுகிறார். 

கொரோனா காலகட்டத்தில், அதிகமான வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டை தனியார் வங்கிகள் வழங்கியது. கிரெடிட் லிமிட்டை அவர்கள் சில வாடிக்கையாளர்களுக்கு குறைத்தே கொடுத்தனர் என்று கூறப்படுகிறது. மொபைல் செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனையும் அதிகரித்தது. அதிகமானோர் UPI  மூலம் பண பரிவர்த்தனை செய்தனர். 

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: After pandemic payments through credit cards outstrip debit card use

Best of Express