நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
இங்கு காய்கறிகளைத் தாண்டி வெள்ளைப் பூண்டு அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மழை இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெள்ளைப் பூண்டு விவசாயத்தில் நல்ல விளைசல் காண முடியும் என்பதால் விவசாயிகள் இப்பகுதியில் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த மாதங்களில் வெள்ளைப் பூண்டு கிலோ 500 ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைத்ததாக தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகப் பூண்டு விளைச்சல் சற்று குறைவாக இருப்பினும் ஒரு கிலோ 250 வரை விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வெள்ளைப் பூண்டு விவசாயத்தில் கூலி செலவு, எருவு மருந்து என அதிக பராமரிப்பு, அதிக வேலைப்பாடு இருந்தாலும் இந்த முறை வெள்ளைப் பூண்டு விளைச்சல் நன்றாக இருப்பதாலும் நல்ல விலை கிடைப்பதாலும் அதிக அளவில் வெள்ளைப் பூண்டு விளைச்சலில் விவசாய்கள் ஈடுப்ட்டுள்ளனர்.
வெள்ளைப் பூண்டு விவசாயம் குறித்து அப்பகுதி விவசாய்கள் கூறுகையில் “20 ஆண்டுகளாக மலைப்பகுதியில் காய்கறிகளைப் பயிர் செய்து வருகிறோம்.வெள்ளைப் பூண்டு மருந்துகள் விலை அதிகம் என்பதால் முதலீட்டுக்கும் அதிக அளவில் செலவாகும்.
இந்த முறை மழையின் காரணமாக வெள்ளைப் பூண்டு விளைச்சல் பெரிய அளவில் இல்லை என்றாலும் நல்ல விலை கிடைத்திருப்பது ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தனர்.
ஒவ்வொரு மழையின்போதும் சற்று பயமாகத் தான் இருக்கும். ஏனென்றால் பயிர்கள் அழுகுமோ, மருந்துகள் அதிக விலைக்கு விற்குமோ என்பதால் ஆனால் இந்த முறை அந்த அச்சம் இல்லை. வெள்ளைப் பூண்டு தற்பொழுது மார்க்கெட் விலையில் 350 முதல் 400 வரை விற்பனை ஆவதால் போதுமானதாக உள்ளது” என கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“