AirAsia | malaysia: மலேசியாவின் கோலாலம்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விமான நிறுவனம் ஏர் ஏசியா. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) டோனி பெர்னாண்டஸ் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், டோனி பெர்னாண்டஸ் சமூக வலைதள பக்கமான லிங்க்ட்இனில் (LinkedIn), நாற்காலியில் அமர்ந்து மசாஜ் செய்து கொண்டே ஆன்லைன் மீட்டிங்கில் பங்கேற்ற புகைப்படத்தைப் பகிர்ந்து இருந்தார். அதுவும் மேல் சட்டை கூட அணியாமால் இருக்கும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
அக்டோபர் 16 அன்று அவர் வெளியிட்ட அந்தப் பதிவில், இந்தோனேசியா மற்றும் ஏர் ஏசியாவின் அலுவலக கலாச்சாரத்தை மிகவும் பாராட்டினார். மேலும், அவரது அலுவலக கலாச்சாரம் அவரை மசாஜ் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் கூட நிர்வாகக் கூட்டத்தை நடத்த அனுமதிக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
"ஒரு மன அழுத்தம் நிறைந்த வாரம். வெரானிடா யோசெஃபின் மசாஜ் செய்ய பரிந்துரைத்தார். இந்தோனேஷியா மற்றும் ஏர் ஏசியா கலாச்சாரத்தை நான் விரும்புகிறேன். இப்போது நான் மசாஜ் செய்து கொண்டு நிர்வாக மீட்டிங்கில் பங்கேற்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: AirAsia CEO Tony Fernandes gets massage during virtual meeting; faces flak on social media
நாங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்து வருகிறோம், நான் இப்போது மூலதன ஏ கட்டமைப்பை இறுதி செய்துள்ளேன். எதிர்வரும் நாட்கள் உற்சாகம் நிறைந்தவையாக இருக்கும். நாங்கள் கட்டமைத்ததைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். முடிவின் பார்வையை ஒருபோதும் இழக்கவில்லை, ”என்று டோனி பெர்னாண்டஸ் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், டோனி பெர்னாண்டஸின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகிறார்கள். அவரது புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அவரது பதிவிற்கு இதுவரை 703 பேர் பதிலளித்துள்ளனர். 96 பேர் கமெண்ட் செய்துள்ளார்கள். அந்தப் பதிவை 42 பேர் மறுபதிவு செய்துள்ளனர்.
அந்தப் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள ஒரு பயனர், இது பொருத்தமற்ற பதிவு என்றும், பைத்தியக்காரத்தனமானது என்றும் பதிவிட்டுள்ளார். "நீங்கள் கூட்டத்தை முடித்துவிட்டு மசாஜ் செய்திருக்கலாம். நாகரீக கலாச்சாரத்தில் இது பொருத்தமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை, ”என்று பயனர் கூறியுள்ளார்.
“உங்கள் நிறுவனத்தில் உள்ள பெண்கள் இந்த சூழலில் வசதியாகவோ அல்லது பாதுகாப்பாகவோ இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, மேலும் நீங்கள் முதலாளியாக இருந்தால், அவர்கள் உங்களுக்கு சவால் விட மாட்டார்கள் அல்லது எதுவும் சொல்ல மாட்டார்கள். அவர்களின் நலனுக்காக, இந்த பதிவை நீங்கள் நீக்கி கருத்துகளைக் கேளுங்கள். நீங்கள் தெளிவாக கலாச்சாரத்தில் அக்கறை கொண்ட ஒரு புத்திசாலித் தலைவர். ஆனால் இது ஆதரவான, பாதுகாப்பான ஒன்றை உருவாக்குவதற்கான வழி அல்ல." என்று மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.