airlines offers : விமான பயணம் மேற்கொள்ள டிக்கெட் புக் செய்ய ஆன்லைனில் தேடிக் கொண்டிருக்கிறார்களா? எந்த நிறுவனம் ஆஃபர் வழங்குகிறது, எவ்வளவு ஆஃபர், பெஸ்ட் சர்வீஸ் எங்கே கிடைக்கும் என உங்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் இங்கே.
இண்டிகோ ஆஃபர்: இண்டிகோ விமான சேவை நிறுவனம் தனது 13வது ஆண்டைக் கொண்டாடும் முகமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறது. இந்தச் சலுகை மூலம் உள்நாட்டு விமானங்களில் 999 ரூபாய்க்கும் வெளிநாட்டு விமானங்களில் 3,499 ரூபாய்க்கும் பயணிக்க முடியும்.
ரூ. 999 மற்றும் ரூ. 3.499. விற்பனையின் கீழ் முன்பதிவு, ஆகஸ்ட் 15 முதல் மார்ச் 31 வரை பயணத்திற்கு செல்லுபடியாகும், இன்று முதல் இந்த சலுகை விலை விமான டிக்கெட் பதிவு தொடங்குகிறது. ஆகஸ்ட் 15, 2019 முதல் மார்ச் 2020 வரை உள்ள நாட்களுக்கு முன்பதிவு செய்யும்போது மட்டுமே இந்தக் கட்டணச் சலுகை பொருந்தும்.
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிகளில் செய்யும் முன்பதிவுகளுக்கு இந்த சலுகை கிடைக்கும். குரூப் புக்கிங் செய்தால் இந்தச் சலுகை கிடைக்காது. இந்தச் சலுகையுடன் கூடவே வங்கி கேஷ்பேக் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். .
ஏர் இந்தியா ஆஃபர்:
ஏர் இந்தியா தனது “மான்சூன் போனான்சா சலுகை” இன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களுக்கான சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. விற்பனையின் கீழ் முன்பதிவு ஆகஸ்ட் 10 வரை செய்யப்படலாம் என்று விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான airindia.in தெரிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் ஆஃபர்:
ஸ்பைஸ்ஜெட் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானங்களுக்கு 12 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. 2019 செப்டம்பர் 25 ஆம் தேதி வரை பயணத்திற்கு செல்லுபடியாகும் இந்த சலுகையின் கீழ், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று விமான வலைத்தளமான ஸ்பைஸ்ஜெட்.காம் தெரிவித்துள்ளது.