முன்னணி டெலிகாம் நிறுவனமாக ஏர்டெல், வாடிக்கையாளர்களுக்கு 1000ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
டெலிகாம் சந்தையில், ஜியோவின் வருகைக்கு பின்னர், அதிரடியான பல மாற்றங்கள் நிகழ்ந்தது. ஜியோவிடம் போட்டி போட முடியாத பல முன்னணி நிறுவனங்கள் தோல்வியை தழுவின. ஜியோவின் அதிகப்படியான போட்டியால் சந்தையில், பெரும் நஷ்டத்தை சந்தித்த ஏர்செல் நிறுவனம் இம்மாதத்துடன் நடையை கட்டுகிறது.
தற்போது, ஜியோவுடன் நேருக்கு நேர் போடியில் குதித்துள்ள ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய அறிவிப்புகளை வெளிட்டு வருகிறது. சமீபத்தில் ஜியோ நிறுவனம், பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 1 ஆண்டுகள் இலவச சேவை வழங்குவதாக அறிவித்தது.
ஜியோவின் இந்த அறிவிப்பு, டெலிகாம் நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனம், பிராட்பேண்ட் திட்டத்தில் 1000ஜிபி இலவச டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஏர்டெல்லின் பிராட்பேண்ட் திட்டமான "பிக் பைட் ஆபர்" மார்ச் 31 2018 வரை மட்டும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பான வ்சதி என்னவென்றால், டேட்டா ரோல் ஓவர் (Data Rollover) என அழைக்கப்படும் முறையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துக் கொள்ளலாம். அதவாது, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டா அடுத்த மாதத்திற்கான கட்டண முறையில் சேர்க்கப்பட்டு விடும்.
ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டு வி- ஃபைபர் திட்டங்களான ரூ.1099 மற்றும் ரூ.1299 திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் இலவசமாக 1000ஜிபி டேட்டாவை பெற முடியும். ஏற்கனவே, இந்த திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்கல் மை ஏர்டெல் செயலில் சென்று மேலும் விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம்,.
அதே போல் இந்த வாய்ப்பைப் பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ இணையத்தளமான 'www.airtel.in/broadband' சென்றும் இந்த திட்டத்த்ல் இணைந்திடுலாம்.