ஏர்டெலின் 5ஜி இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம்!

இந்த 5ஜி சேவையின் சோதனை ஓட்டம் குருகிராமில் நடத்தப்பட்டது

ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முன்னணி நிறுவனமான தொலைத்தொடர்பு சாதனங்கள், வாடிக்கையாளர்களுக்கு 2ஜி முதல் 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் டெலிகாம் நிறுவனங்கள் புதிய புதிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் சமீப காலமாக 5ஜி சேவையை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் எண்ணம் தனக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏர்டெலுடன் ஹவாய் நிறுவனம் விரைந்து கூடிய விரைவில் 5ஜி சேவையை வழங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

நடப்பு ஆண்டிற்குள் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப சேவையை துவங்கும் என்று ஹவாய் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரியான ஜே சென் தெரிவித்திருந்தார். இந்த புதிய 5ஜியின் வேகமானது நொடிக்கு 1000 எம்.பியை வரை இருக்கும் என்றும், ஹவாய் நிறுவனத்தின் சார்பாக இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகின. 5ஜி தொழில்நுட்பத்தின் அங்கமான MIMO (மல்டிபிள் இன் மல்டிபிள் அவுட்) தொழில்நுட்பம் இந்தாண்டிலேயே இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உரிமையை ஹவாய் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மூன்று இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தின் வணிகரீதியான பயன்பாடு பரவலாக காணப்படும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 13 வட்டாரப்பகுதிகளில் ஹவாய் நிறுவனம் ஏற்கனவே 4.5ஜி தொழில்நுட்ப சேவையினை செயல்படுத்தியுள்ளது. இவற்றில் சில மேம்பாடுகள் செய்வதன் மூலமாக 5ஜியாக மாற்ற முடியும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்பட தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த 5ஜி சேவையின் சோதனை ஓட்டம் குருகிராமில் நடத்தப்பட்டது. இந்த சோதனை முழுமையாக வெற்றி கண்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

×Close
×Close