ஒரே குடையில் 'மொபைல், டிடிஹெச், பிராட்பேண்ட்' - ஏர்டெல்லின் புதிய திட்டம்

Airtel: மூன்றாவது One Airtel திட்டத்தின் கட்டணம் ரூபாய் 2,000/-. இது இரண்டாவது திட்டம் வழங்கும் அதே நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்துக்கும் இரண்டாவது திட்டத்துக்கும்...

Airtel Updates: ஏர்டெல் தனது அனைத்து சேவைகளையும் ஒருங்கினைத்து புதிய ஒற்றைத் தொகுப்பு திட்டமாக (bundled plan) வழங்க திட்டமிட்டு வருகிறது. புதிய One Airtel தொகுப்பு திட்டம் அதன் டிடிஹெச், பிராட் பேண்ட் மற்றும் கைபேசி சேவைகளை ஒன்றிணைக்கும் போது, ஒரு ஒருங்கிணைந்த அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கும் என 91Mobiles தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஒரு சோதனைத் முயற்சியாக One Airtel திட்டம் மார்ச் 25, 2020 அன்று தொடங்கப்படும். ஆரம்பத்தில் ஏர்டெல் மூன்று திட்டங்களை (plans) வெளியிடும் முழு சேவைகளும் மூன்று அல்லது நான்கு முக்கிய சந்தைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்படும். இந்த சேவை இலவச OTT சேவைகளையும் வழங்கக்கூடும்.

நான்கு மணி நேரம் மட்டும் செயல்படும் வங்கிகள் – கடன் வழங்குவதும் நிறுத்தம்

இந்த நேரத்தில் One Airtel திட்டத்தின் சரியான கட்டண விவரம் தெரியவில்லை. ஆனால் ரூபாய் 1,000/- க்கு குறைவாக துவங்கி ரூபாய் 2,000/- வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக விலையுள்ள திட்டம் கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு அதிக பயன்களை வழங்கும். அறிமுக சலுகை என்பது இந்த வகையான தொகுப்பு திட்டங்களுக்கு பயனர் தேவையை அளவிடுவதாகும்.

சோதனை திட்டத்தின் கீழ் மூன்று One Airtel திட்டங்கள் இருக்கும். ரூபாய் 1,000/- தில் ஆரம்பிக்கும் அடிப்படைத் திட்டத்தில் 75GB கைபேசி டேட்டா, டிடிஎச் அணுகும் வசதி (access), voice calling, மற்றும் Amazon Prime Video, Zee5, மற்றும் Airtel Xstream க்கான சந்தாக்களை அடக்கிய இலவச streaming சேவைகளும் இருக்கும். இந்த திட்டத்தில் பிராட் பேண்ட் அணுகும் வசதி (broadband access) இருக்காது.

இரண்டாவது திட்டம் உத்தேசமாக ரூபாய் 1,500/- என்ற கட்டணத்தில் இருக்கும். இதில் 125GB கைபேசி டேட்டா, அளவில்லாத கால்கள், ஏர்டெல்லின் டிடிஹெச் சேனல்கள் மற்றும் OTT சேவைகளும் இருக்கும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 500GB அதிவேக பிராட் பேண்ட் டேட்டாவும் இருக்கும். மேலும் FUP க்கு பிறகு வேகம் 1Mbps ஆக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ-யின் Quick – Missed call Banking : நெட் இல்லாமல் பேலன்ஸ் செக் பண்ணலாம்

மூன்றாவது One Airtel திட்டத்தின் கட்டணம் ரூபாய் 2,000/-. இது இரண்டாவது திட்டம் வழங்கும் அதே நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்துக்கும் இரண்டாவது திட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து சரியாக தெரியவரவில்லை.

இப்போதைக்கு ஏர்டெல் கைபேசி, டிடிஹெச் மற்றும் பிராட் பேண்ட் சேவைகளை தனித்தனியாக வழங்கிவருகிறது. மேலும் இவை அனைத்தும் வெவ்வேறு கட்டணத்தில் துவங்குகிறது. One Airtel திட்டம் இவை அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் இந்த மூன்று சேவைகளையும் மலிவான விலையில் பெறுவதற்கான வழியும் செய்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close