ஏர்டெல் நிறுவனம் வோல்ட்இ பீட்டா திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி இலவச டேட்டாவை வழங்கவுள்ளது.
ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக VoLTE எனப்படும் குரல் சேவையை அறிமுகம் செய்தது. 4ஜி நெர்வோட்ர்கில் இயங்கக் கூடிய இந்த VoLTE அழைப்பு குறுகிய காலத்திலியே மக்களிடம் பிரபலம் அடைந்தது.
இந்நிலையில், ஜியோவிற்கு போட்டியாக எர்டெல் நிறுவனமும் VoLTE சேவையை வழங்க களத்தில் குதித்துள்ளது. இதை சோதித்து பார்க்க பீட்டா சேவையை முதலில் உருவாக்கி அதை வாடிக்கையாளர்களை வைத்தே சோதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பீட்டா சோதனையில் பங்கேற்க, ஏர்டெல் 4ஜி சிம்மை முதல் போர்ட்டில் போட வேண்டும். பின்னர் ஸ்மார்ட்போனில் உள்ள VoLTE விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
முதலில் இந்த 30 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு பிரித்து வழங்கப்படும். முதலில் 10 ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு, 4வது மற்றும் 8வது வாரங்களில் 20 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த சோதனையின் போது வாடிக்கையாளர்கள் அவ்வப்போது சீரற்ற நெட்வொர்க் பிரச்சனை ஏற்படும். இதுக் குறித்து அவர்கள் ஏர்டெல் நிறுவனத்திடம் புகார் அளிக்க வேண்டும்.
முதற்கட்டமாக, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், கேரளா, பீகார், பஞ்சாப் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் இந்த VoLTE சேவையின் சோதனை ஆரம்பிக்கப்படுகிறது.